$
Foods That Damage Your Brain Health: இன்றைய வாழ்க்கை மற்றும் உணவு முறை காரணமாக நம் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக உணவுகளால் ஆரோக்கியம் பாதிக்கிறது. இது உடல் மட்டுமல்ல, மூளையையும் பாதிக்கிறது.
கடமை நம்மை அழைக்கும் பொழுதில், நம்மால் சரியான உணவை உட்கொள்ள முடியாது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில், வீட்டில் உணவு செய்ய நேரமில்லாமல், வெளியில் உள்ள கண்ட உணவுகளை உட்கொள்கிறோம். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

ஒருவருக்கு மூளை செயல்பாடு ஒழுங்காக இல்லை என்றால், சரியாக இயங்க முடியாது. மூளை ஆரோக்கியத்தை காப்பதிலும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்ற. மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது? என்பதை இங்கே காண்போம்.
மூளை ஆரோக்கியத்திற்கான உணவுகள்
மூளை ஆரோக்கியமாக செயல்பட உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. பருப்பு வகைகள், பழங்கள், முழு தானியங்கள், காய்கறிகள், விதைகள் போன்ற தாவர உணவுகள் மூளையை காக்கின்றன. இவற்றில் எண்ணற்ற சத்துகள் நிறைந்துள்ளன.

ஆன்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின், தாது மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த தாவர அடிப்படையிலான உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை வாழ்நாள் முழுக்க உங்களின் மூளை ஆரோக்கியத்தை பாதுக்காக்கும்.
மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்
மூளையை ஆரோக்கியமாக இருக்க சில உணவுகள் உதவினாலும், வேறு சில உணவு வகைகள் மூளை ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அப்படிபட்ட உணவுகளை இங்கே காண்போம்.
வறுத்த இறைச்சி
ஆளை இழுக்கும் நறுமணமும், சுண்டி இழுக்கும் ருசியையும் கொண்ட, டீப் ஃப்ரை செய்யப்பட்ட இறைச்சிகள், உங்களை திருப்திபடுத்த மட்டும்தான் உதவும். ஆனால் இது மூளையை ஆபத்தில் தள்ளும். ஆழமாக வறுக்கப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதால், உடல் நலத்தை குறைப்பதுடன், மூளையை மங்கச் செய்யும்.

உங்களுக்கு இறைச்சி சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், நாட்டுக் கோழியை குழம்பு வைத்தும், மிதமான எண்ணெயில் வறுத்தும் சாப்பிடவும். இது உங்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது.
இதையும் படிங்க: Boost Brain Power: மூளை ஆற்றலை அதிகரிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கிறது. இது அல்சைமர், டிமென்ஷியா, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். இது மூளையை பாதிக்கிறது. இதற்காக சிவப்பு இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. அளவோடு சாப்பிட வேண்டும்.
ஆல்கஹால்
ஆல்கஹால் உட்கொள்வதால் சில மணி நேரங்களுக்கு நீங்கள் மன அமைதியாகவும், நிம்மதியாகும் உணரலாம். இவை தற்காலிகமானது தான். இதனை உட்கொள்வதால் மூளை பாதிக்கப்படும். நினைவாற்றலை இழக்கச் செய்யும். மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த மது பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதிகமாக குடித்தால்தானே ஆபத்து, குறைவாக குடிக்கலாமே என்று யோசிக்கிறீர்களா? அதிகமோ குறைவோ.. மது அருந்துவது உடல் நலத்திற்கு எப்போதும் தீங்கு தான். இது மூளையை செயலிழக்கச் செய்யலாம். ஆகையால் இதனை தவிர்க்கவும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உட்கொள்வது, மூளையில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். இது மூளை செல்லுலாரில் செயல்பாடுகளை முற்றிலும் பாதிக்கும்.
சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால், நினைவாற்றல் குறைபாடுகள் உண்டாகலாம். மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வெள்ளை அரிசி
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, மூளையை மந்தமாக்கும். அரிசி, பிரெட் போன்ற உணவுகள் அல்சைமர் நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். இதனை தவிர்க்க கோதுமை பிரெட், பழுப்பு அரிசி போன்றவற்றை உணவில் சேர்க்கலாம்.
பாதரசம் நிறைந்த மீன்கள்
மீன்களில் ஆரோக்கியமான ஒமேகா கொழுப்பு நிறைந்த மீன்களும் இருக்கின்றன. அதே சமயம், பாதரசம் நிறைந்த மீன்களும் இருக்கின்றன. பாதரசம் நிறைந்த மீன்கள், நினைவாற்றலை குறைக்கும். இது மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பின் குறிப்பு
இந்த பதிவில் உள்ள தகவல்கள், தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இதன் உண்மை தன்மை குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும்.
Image Source: Freepik