Honey Dragon Fruits: தேன் கலந்த டிராகன் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Honey Dragon Fruits: தேன் கலந்த டிராகன் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?


தேன் டிராகன் பழம்

தேன் டிராகன் பழம் ஆனது பிடாயா என அழைக்கப்படுகிறது. பச்சை நிற செதில்களைக் கொண்டு துடிப்பான மஞ்சள் நிற அல்லது இளஞ்சிவப்பு தோலைக் கொண்டுள்ளது. தேன் கலந்த டிராகன் பழத்தின் சுவையும், நிறமும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் ஆற்றலைத் தருகிறது. மேலும், இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைய உதவும் பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

தேன் கலந்த டிராகன் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

பிடாயா என அழைக்கப்படும் தேனுடன் கூடிய டிராகன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

தேன் டிராகன் பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் சி, மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்களையும், தாதுக்களையும் கொண்டுள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் வலுவான எலும்புகளை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Coconut Water: தேங்காய் தண்ணீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க

இதில் அதிக அளவிலான வைட்டமின் சி சத்துகள் காணப்படுகின்றன. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்

இந்த தேன் டிராகன் பழமானது ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் விளைவுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், இது நோயின் அபாயத்தைக் குறைத்து உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது.

தோல் ஆரோக்கியத்திற்கு

தேன் டிராகன் பழம் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த இயற்கையான மூலமாகும். எனவே, இது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. மேலும், தேன் கலந்த டிராகன் பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைக் குறைத்து, விரைவில் முதுமை அடைவதற்கான அறிகுறிகளைக் குறைக்கலாம்.

செரிமான மேம்பாட்டிற்கு

தேன் டிராகன் பழத்தில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும், குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதுடன், ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

Image Source: Freepik

Read Next

Kidney Stone Remedies: சிறுநீரகக் கல்லை அகற்ற இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்

Disclaimer

குறிச்சொற்கள்