Dragon Fruit Benefits : டிராகன் பழத்த அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Dragon Fruit Benefits : டிராகன் பழத்த அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?


டிராகன் பழம் உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஸ்பைக் போன்ற பச்சை இலைகளுடன் வெளியில் இருந்து பார்த்தால் இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் பார்க்கவே விநோதமாக இருப்பதால் இந்த பழம் பலராலும் விருப்பப்படுவதில்லை. அதேபோல் கிவி பழத்தைப் போல் லேசான புளிப்பு சுவையும், பேரிக்காயைப் போல் மிகக்குறைவான இனிப்புச் சுவையும் கொண்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு பழமான இதனை இந்தியர்கள் உட்கொள்வது உடல் நலனுக்கு எவ்வித நன்மையையும் அளிக்காது என்ற வதந்தியும் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் இந்த பழத்தில் என்ன நன்மைகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் குறித்து அறிந்து கொள்வோம்.

டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள்:

டிராகன் பழத்தில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இது உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

இதில் வைட்டமின் பி1, பி2 மற்றும் பி3 உள்ளது. டிராகன் பழத்தை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பல உடல்நலக் கோளாறுகள் நீங்கும் என நிபுணர்கள் உறுதியளிக்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. எனவே டிராகன் பழம் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் வெள்ளை இரத்த அணுக்களைப் பாதுகாப்பதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்கிறது.

இந்த ஜூசி பழம் வெள்ளை இரத்த அணுக்களைப் பாதுகாக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள பீட்டாசயனின்கள், பீடாக்சாண்டின்கள் போன்ற ஆக்ஸினேற்றிகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கீல்வாதத்தை தடுக்க உதவுகிறது.

செரிமானத்திற்கு நல்லது:

டிராகன் பழத்தில் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் லாக்டோபாகில்லி மற்றும் பிஃபிடோபாக்டீரியா போன்ற நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி, செரிமானத்தை சீராக்குகிறது.

இதையும் படிங்க: Benefits of Banana: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

மேலும் குடல் தொற்று மற்றும் மலச்சிக்கல் அபாயத்தையும் தடுக்கிறது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்துவதோடு, இரைப்பை குடல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

சருமம், முடிக்கு ஊட்டச்சத்து:

ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. டிராகன் பழம் உங்கள் சருமத்திற்கு சிறந்தது. முகப்பரு, வறண்ட சருமம், வெயில் மற்றும் வயதானவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து உங்கள் சருமத்தை பிரகாசமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இது உங்கள் முடியின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

டிராகன் பழத்தில் உள்ள இரும்புச்சத்து முடிக்குத் தேவையான ஆக்ஸிஜனை அதன் வேர்க்கால்கலுக்கு கொண்டு சேர்க்கிறது. இது கூந்தல் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற உதவுகிறது.

இரும்புச் சத்து அதிகரிக்கும்:

டிராகன் பழத்தில் உள்ள அதிக இரும்புச் சத்து, உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்குப் பொறுப்பான சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

இதனால் இரத்த சோகை அல்லது ஸ்கர்வி போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். ஒரு டிராகன் பழத்தில் 9 சதவீதம் அளவிற்கு இரும்புச்சத்து உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எடை குறைப்பு:

இயற்கையாகவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால்.. உங்கள் தினசரி உணவில் டிராகன் பழத்தை சேர்த்துக்கொள்ளுவது சிறப்பானது. ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இந்த சூப்பர்ஃபுட் நார்ச்சத்து நிறைந்தது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

இதையும் படிங்க: Murungai Poo Benefits: இவ்வளவு இருக்கா… இது தெரிஞ்சா முருங்கைப் பூவை விடமாட்டீங்க!

சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, சிவப்பு நிற டிராகன் பழத்தில் உள்ள பீட்டாசயனின்கள் உங்கள் குடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் பருமனைத் தடுப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு:

டிராகன் பழத்தில் ஃபிளாவனாய்டுகள், ஃபீனாலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த பழம் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தங்களது உணவில் டிராகன் பழத்தை சேர்த்து வந்தால், எதிர்காலத்தில் நீரழிவு நோயாளியால் பாதிக்கப்படும் வாய்ப்பை பாதியாக குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image Source: Freepik

Read Next

Green Tomato Benefits: BP-யை கட்டுப்படுத்து பச்சை தக்காளி… எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்