Natural Remedies for Kidney Stones: உடலின் முக்கிய செயல்பாடுகளில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள கழிவுகளையும், தேவையற்ற திரவங்களையும் வெளியேற்றும் உறுப்பாகும். உடலின் நச்சுக்களை சிறுநீர்பாதை வழியாக, சிறுநீர்ப்பையில் வெளியேற்றுகிறது. எனினும், சில காரணங்களால் படிகங்கள் உருவாகி சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் மட்டுமே எளிதில் குணப்படுத்த முடியும்.
சிறுநீரகக் கற்கள் உண்டாவதற்கான காரணம்
சிறுநீரகக் கற்கள் உருவாக முக்கிய காரணங்களில் ஒன்று சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று ஆகும். மேலும், போதுமான அளவு உடலில் தண்ணீர் இல்லாத காரணத்தாலும் சிறுநீரகக் கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம் ஆகும். இவ்வாறு தண்ணீர் குடிப்பதன் மூலம் மட்டுமே, சிறுநீரகத் தொற்றால் ஏற்படும் சிறுநீரகக் கற்களை அகற்ற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
சிறுநீரகக் கற்களை அகற்ற உதவும் இயற்கையான உணவுப் பொருள்கள்
சில உணவுப் பொருள்களை சேர்த்துக் கொள்வதன் மூலம், சிறுநீரகக் கற்களை எளிதில் அகற்ற முடியும். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
குல்தி பருப்பு
குதிரைவாலி எனப்படும் இந்த பருப்பு ஆயுர்வேதத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இதில் உள்ள ஸ்டீராய்டுகள், பிளவனாய்டுகள், புரதங்கள், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை சிறுநீரகக் கற்களின் சிகிச்சைக்கு உதவுகின்றன. குறிப்பாக சிறுநீரகக் கற்களை அகற்றும் இயற்கை உணவாக குதிரைவாலி சூப் பயன்படுகிறது. இது சிறுநீரகக் கற்களை அகற்றுவதுடன், மீண்டும் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்
பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆப்பிள் சைடர் வினிகர் உள்ளது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் பி, சி மற்றும் அசிட்டிக் அமிலங்களே காரணம் ஆகும். மேலும், ஆப்பிள் சைடர் வினிகரில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது இயற்கையாக சிறுநீரகத்தில் உள்ள தொற்றுகளை அகற்ரி, சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுகிறது.
ராஜ்மா அல்லது கிட்னி பீன்ஸ்
மிகுந்த புரதச்சத்து மிகுந்த கிட்னி பீன்ஸ், உடலின் செரிமானத்திற்கு உதவக்கூடியதாக அமைகிறது. மேலும், இது கரையக்கூடிய மற்றும் கரையாத என இரண்டு வகை நார்ச்சத்துகளையும் கொண்டுள்ளது. மேலும், இதில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இவற்றில் உள்ள வைட்டமின் பி சத்துகள் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: அதிக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
எலுமிச்சைச்சாறு மற்றும் தேன்
ஆரோக்கியமான அமுதங்களில் ஒன்றாக எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் உள்ளது. இவை இரண்டும் தனித்தனியே முறையே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இது உடலில் உள்ள சிறுநீரகக் கற்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சைச்சாறுடன், தேன் கலந்து குடித்து வர சிறுநீரகக் கற்கள் கரைதுடன் வலி குறையும்.
துளசி
ஆயுர்வேத மருத்துவத்தில் முதன்மை வகிக்கும் துளசி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன்களை அளிக்கிறது. இது உடலை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், சிறுநீரகத்தில் உள்ள தாதுக்கள், யூரிக் அமிலம் போன்றவற்றை சமநிலையில் வைக்க உதவுகிறது. துளசி இலைகளை நீரில் போட்டு, நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது துளசி பொடியை தேனில் கலந்து குடித்து வர சிறுநீரகக் கற்கள் நீங்கி விடும்.
மாதுளைச் சாறு
மாதுளையில் அதிக அளவிலான நார்ச்சத்துகள், வைட்டமின் பி, சி, கே மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் காணப்படுகின்றன. இவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகக் கற்களை அகற்றவும், மீண்டும் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?
Image Source: Freepik