Gut Healthy Snacks: குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த ஸ்நாக்ஸ் வகைகள் இதோ!

  • SHARE
  • FOLLOW
Gut Healthy Snacks: குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த ஸ்நாக்ஸ் வகைகள் இதோ!


குடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியம்

குடல் சரியில்லை என்றால் அசிடிட்டி, வாயு, அஜீரணம், வயிற்று வலி, புளிப்பு ஏப்பம், நெஞ்செரிச்சல், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் பல தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரும். குடல் பிரச்சனை ஏற்பட்டால் உடலின் பிற பாகங்களுக்கும் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் குடல் முக்கிய பங்கு வகிப்பதால், அதை பராமரிப்பது முக்கியம்.

இதையும் படிங்க: காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

குடலுக்கு ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு வகைகள்

உங்கள் உணவில் குடலுக்கு ஏற்ற தின்பண்டங்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம். ஸ்நாக்ஸ் சாப்பிடாமல் பலரால் இருக்க முடியாது. ஸ்நாக்ஸ் உடலுக்கு கேடு என பலரும் சொல்வதுண்டு. ஸ்நாக்ஸ் வகைகளில் ஆரோக்கியமானவைகளும் உண்டு. இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ள ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டால் உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சியா விதைகள்

சியா விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவற்றின் ஆற்றல் மையமாகும். சியா விதைகளை பாதாம் பாலில் ஊறவைத்து, இனிப்புக்காக மேப்பிள் சிரப்பைச் சேர்த்து ஒரு சுவையான சியா விதை புட்டை உருவாக்கி மகிழ்வோடு உண்ணுங்கள், இது திருப்திகரமான குடல்-ஆரோக்கியமான ப்ரேக் பாஸ்ட் ஆகும்.

ஸ்வீட் பொட்டேட்டோ பொரியல்

வழக்கமாக நீங்கள் செய்யும் பொரியலை போன்றே ஸ்வீட் உருளைக்கிழங்கு பொரியலையும் செய்யுங்கள். இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூடுதல் சுவைக்காக சேர்க்கப்படும் தேவையற்ற மசாலா பொருட்களை நீக்குவது நல்லது.

பாதாம் உடனான டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டை மிதமாக உட்கொள்ளும் போது அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிக கோகோ உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட்டைத் தேர்ந்தெடுங்கள், ஏனெனில் இதில் குடலுக்கு நன்மை பயக்கும் மூலங்கள் நிறைந்துள்ளன.

வறுத்த கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும், இவை இரண்டும் ஆரோக்கியமான குடலுக்கு பங்களிக்கின்றன. சமைத்த கொண்டைக்கடலையை ஆலிவ் எண்ணெய் மற்றும் உங்களுக்கு விருப்பமான மசாலாப் பொருட்களில் போட்டு வறுத்து சாப்பிடவும். இது செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

பட்டானி

குடலுக்கு இயற்கையாகவே நிறைய நார்ச்சத்து தேவைப்படுகிறது. பட்டானியில் போதுமான நார்சத்துக்கள் நிறைந்துள்ளது. பட்டானியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்சத்துக்களின் மூலமாக இருக்கிறது. இது குடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

உணவில் பூண்டு சேர்ப்பது நல்லது

உங்கள் உணவில் பூண்டு இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். இதில் அல்லிசின், செலினியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், குரோமியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி பி ஆகியவை அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் குடலுக்கு நல்லது.

மெதுவாகவும் கவனமாகவும் சாப்பிடுங்கள்

குடல் ஆரோக்கியமாக இருக்க எந்த உணவை சாப்பிட்டாலும் அமைதியான மற்றும் சரியான இடத்தில் சாப்பிட வேண்டும். டிவி, மொபைல் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவை சரியான அளவு சாப்பிடுங்கள், தேவைக்கு அதிகமாவும் சாப்பிட வேண்டாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: முந்திரி சாப்பிடுவது இரத்தக் கொழுப்பை அதிகரிக்குமா? உணவியல் நிபுணரின் கருத்தைத் தெரிந்துகொள்வோம்

எதையும் அவசரஅவசரமாக சாப்பிடக் கூடாது. உணவை மெதுவாகவும் மென்றும் சாப்பிட வேண்டும். தரமான மற்றும் ஆரோக்கியமான உணவை மட்டுமே தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

image source: freepik

Read Next

Dengue Fever Foods: டெங்குவை எதிர்த்துப் போராட RBC செல்களை அதிகரிக்க உதவும் உணவுகள்

Disclaimer

குறிச்சொற்கள்