Dengue Recovery Foods: குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக டெங்கு காய்ச்சல் உள்ளது. இது டெங்கு கொசுக்களால் பரவும் பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். இதற்கு குறிப்பிடத்தக்க சிகிச்சை எதுவும் இல்லை எனினும், டெங்குவைத் தடுப்பதற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தலாம். குறிப்பாக, டெங்குவை எதிர்த்துப் போராட சில உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் RBC நிறைந்த உணவுகள் அவசியமாகின்றன. அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட, உணவுமுறை மாற்றங்கள் உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான சில சூப்பர் உணவுகளின் பட்டியலை ஃபிசிகோ டயட் மற்றும் ஸ்கின் கிளினிக்கின் நிறுவனர் டாக்டர் விதி சாவ்லா பகிர்ந்துள்ளார்.
டெங்குவைப் போராட உதவும் இரத்த சிவப்பணுக்களின் முக்கியத்துவம்
டெங்கு ஏற்படும் போது இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். இது த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இரத்த சிவப்பணுக்களை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
டெங்குவை எதிர்த்துப் போராட உதவும் RBC உணவுகளின் பட்டியல்
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இது டெங்கு அறிகுறிகளைத் தடுப்பதற்கும், டெங்கு காய்ச்சலுக்கு எதிராகப் போராடவும் உதவுகிறது.
பீட்ரூட்
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது பீட்ரூட் ஆகும். இதற்குக் காரணம் பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே காரணம் ஆகும். இது திசுக்களுக்கு ஆக்ஸிஜனை விநியோகித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
பருப்பு வகைகள்
பொதுவாக பருப்பு வகைகளில் இரும்பு, புரதச்சத்துகள் மற்றும் ஃபோலெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை இரத்த சிவப்பணுக்களின் தொகுப்பிற்கு உதவுகிறது. மேலும் டெங்குவின் போது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.
மாதுளை
இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் சி சத்துகள், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இவை இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இதனுடன், டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது முக்கிய ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Black Tomato: கருப்பு தக்காளியில் கொட்டி கிடக்கும் நன்மைகள்
கொய்யா
வைட்டமின் சி, ஏ போன்ற சத்துக்கள் கொய்யாவில் ஏராளமாக உள்ளன. இவை இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதுடன் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
தர்பூசணி
தர்பூசணியானது 90% அளவில் நீர்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும், இவற்றில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி6 நிறைந்து காணப்படுகின்றன. இவை டெங்கு ஏற்படும் போது ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை பராமரிக்க உதவுகிறது.
பூசணி விதைகள்
இதில் அதிக அளவிலான துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்துகள் உள்ளது. இவையே இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிப்பதுடன், பிளேட்லெட் அளவையும் அதிகரிக்க உதவுகிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
கீரை
கீரையில் அதிக அளவிலான வைட்டமின் சி, ஏ, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துகள் நிரம்பி காணப்படுகின்றன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரித்து டெங்கு அறிகுறிகளின் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
பிரவுன் ரைஸ்
பிரவுன் ரைஸ் எனப்படும் பழுப்பு அரிசியில் இரும்பு மற்றும் இன்னும் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், இவை உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
ப்ரோக்கோலி
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், இரும்புச்சத்து போன்றவை ப்ரோக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. இவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது டெங்கு காய்ச்சலுக்கு எதிரான பண்புகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!
Image Source: Freepik