Drinking Raw Milk: பாலை காய்ச்சாமல் குடிப்பது நல்லதா? கெட்டதா?

  • SHARE
  • FOLLOW
Drinking Raw Milk: பாலை காய்ச்சாமல் குடிப்பது நல்லதா? கெட்டதா?

1900-களின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை, அதாவது பேஸ்டுரைசேஷன் (pasteurization) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் இயற்கையான, காய்ச்சாத பாலை பச்சையாக உட்கொண்டனர். ஏனென்றால், பச்சைப் பால் ஆரோக்கியமானது என்ற கருத்த்தால் அதன் நுகர்வு அதிகரித்தது. இதை தொடர்ந்து, பேஸ்சுரைசேஷன் செயல்முறை பாலில் உள்ள ஊட்டச்சத்தை குறைப்பதாக கட்டுக்கதைகள் எழுந்தது. ஆனால், இது உண்மையல்ல. பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலில் பச்சை பாலில் உள்ளதை போல அதே அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பச்சை பால் குடிப்பது நல்லதா என்பதை பார்க்கலாம்.

பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டும் வெப்ப நிலைத்தன்மை கொண்டவை மற்றும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படாமல் இருக்கும். அதுமட்டும் அல்ல, இதில் நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் B1, B6, B9, B12 மற்றும் C ஆகியவையும் காணப்படுகிறது. மேலும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E மற்றும் K இதில் உள்ளது. காய்ச்சிய பாலுடன் ஒப்பிடும்போது பச்சைப் பால் எந்த ஊட்டச்சத்து நன்மையையும் கொண்டிருக்கவில்லை என ஆய்வுகள் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் : முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

பாலை காய்ச்சாமல் குடிப்பதன் தீமைகள் :

கச்சா பாலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். அவற்றை நாம் அப்படியே குடிக்கும் போது தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

தொற்றுநோய் அபாயம்

காய்ச்சாத பச்சை பாலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை எளிமையாக பாதிக்கும். எனவே, காய்ச்சாத பச்சை பாலை குடிக்கும் போது, கிருமி தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, பாலை காய்ச்சி குடிப்பது நல்லது.

காசநோய் அபாயம்

காய்ச்சாத பச்சை பாலை குடிப்பதினால், காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிது. குறிப்பாக, நுரையீரலுக்கு தொடர்பில்லாத (EPTB) காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காசநோய், நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளை அதிகமாக பாதிக்கும். இது காலப்போக்கில் பெரிய தீங்குகளை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Foods For Fatigue : அடிக்கடி பலவீனமாக உணர்கிறீர்களா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

​உடல் எடை அதிகரிப்பு

கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலம் பால். காய்ச்சாத பச்சை பாலில் அளவுக்கு அதிகமா காணப்படும் இந்த சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றனர். சில அலர்ஜிகளுக்கும் இது வழிவகுக்கும். மேலும், பச்சை பாலில் லாக்டோஸ் எனும் நொதியை உற்பத்தி செய்யும் லாக்டோபாகிலஸ் பாக்டீரியா உள்ளது. செரிமானத்திற்கு உதவும் இந்த நொதி குடலில் அதிகமாக சுரந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இரத்த சோகை

காய்ச்சிய பாலுடன் ஒப்பிடுகையில் பச்சை பாலில் குறைந்த அளவே ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இதனால், இரத்த சோகை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். மேலும், காய்ச்சாத பாலை குடிப்பதால் விலங்குகளின் நோய் மனிதர்களிடையே பரவலாம். குரங்கின் இறைச்சியில் இருந்து எபோலா மனிதனை தாக்கியது போல, காய்ச்சாத பாலை குடிப்பதால் விலங்குகளின் நோய் மனிதர்களை தாக்கலாம்.

Image Credit: Freepik

Read Next

ஜென்மாஷ்டமி விரதம்.. எதை சாப்பிடனும்.? எதை சாப்பிடக்கூடாது.? தெரிஞ்சிக்கலாம் வாங்க..

Disclaimer