Healthy foods to eat reduce fatigue : நம்மில் பலர் அடிக்கடி பலவீனமாக உணர்வோம். ஆனால், அதை நாம் சரிவர கவனிக்காமல் லேசில் விட்டு விடுவோம். அப்படி செய்து பெரும் தவறு. அடிக்கடி பலவீனமாக உணர்வதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்து இல்லாதது, தூக்கமின்மை அல்லது ஹார்மோன்களின் சமநிலையின்மை இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.
நமது அன்றாட பணியை சரியாக முடிக்க உடலுக்கு போதிய ஆற்றல் தேவை. எனவே தான் நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். ஏனென்றால் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் நாம் சாப்பிடும் உணவில் இருந்துதான் நமது உடலுக்கு கிடைக்கிறது. நீங்கள் எப்போதும் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தாலோ, உடலில் ஆற்றல் இல்லாதது போல் தோன்றினாலோ அது உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கான அறிகுறியாகும். எனவே, மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
முக்கிய கட்டுரைகள்

இருப்பினும், சில உணவுகளை உங்கள் உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், சோர்வை முற்றிலும் நீக்க முடியும். ஹார்மோன் சமநிலையின்மையால் வரும் சோர்வை நீக்க நாம் உட்கொள்ளவேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை

எலுமிச்சை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது உடலை நச்சுத்தன்மை இல்லாமல் வைக்க உதவுவது மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் கொண்டுள்ளது. உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தாலும் நாம் பலவீனமாக உணர்வோம். இந்நிலையில், பருப்பு வகைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும்.
இஞ்சி டீ
நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இஞ்சி டீ குடித்தால், அது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும்.
கோதுமை புல் (Wheatgrass)
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கோதுமை புல் தூளை கலக்கவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்க்கவும். இது தூக்கத்தை மேம்படுத்தவும், குடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும் மற்றும் உடலுக்கு பலம் அளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே
இரும்புச்சத்தை அதிகரிக்கும் பீட்ரூட் ஸ்மூத்தி

சோர்வை சமாளிக்க இந்த ஆரோக்கியமான பணத்தை நீங்கள் முயற்சி செய்யலாம். பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஏராளமான சத்துக்களும் அடங்கியுள்ளன. இது உடலில் ஆற்றல் உற்பத்தியை ஆதரிக்கிறது. இதை காலையில் உணவுக்கு பின் எடுத்துக் கொள்ளலாம். இது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக உணர வைக்கும்.
பீட்ரூட் ஸ்மூத்தி ரெசிபி
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 1.
இஞ்சி - அரை துண்டு.
புதினா - கைப்பிடி.
செலரி - 2 பங்குகள்.
ஆப்பிள் - 1/2.
சியா விதைகள் - 1 ஸ்பூன்.
செய்முறை :
- முதலில் எல்லாவற்றையும் சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
- பின்னர் காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- நறுக்கிய எல்லாவற்றையும் மிக்ஸியில் போடவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- அதை வடிகட்டவும், வடிகட்டிய பின் சல்லடையில் மேலே வந்த கூழில் சிறிது பகுதியை சேர்க்கவும், இதனால் நார்ச்சத்து கிடைக்கும்.
- இப்போது அதில் எலுமிச்சை சாறு மற்றும் சியா விதைகளை சேர்த்து குடிக்கவும்.