Over Boiling Tea: டீயை அதிகமாக சூடுபடுத்தி குடிச்சிகிட்டே இருந்தா என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Over Boiling Tea: டீயை அதிகமாக சூடுபடுத்தி குடிச்சிகிட்டே இருந்தா என்ன பிரச்சனை வரும் தெரியுமா?


எனவே தேநீர் அருந்துவதைத் தவிர, அதை மீண்டும் மீண்டும் அதிக சூடுபடுத்தி உட்கொள்வதும் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில், இவ்வாறு அதிகப்படியாக சூடுபடுத்துவது அதில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் குறைக்கலாம். மேலும், அமிலத்தன்மையை ஏற்படுத்துவதுடன், புற்றுநோய் போன்ற அபாயத்தையும் ஏற்படுத்தலாம். இதில் பால் டீயை அதிகம் சூடுபடுத்துவதால் ஏற்படும் விளைவுகள் சிலவற்றைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Milk Vs Curd: குடல் ஆரோக்கியத்திற்கு எது மிகவும் நல்லது? பால் அல்லது தயிர்?

தேநீரில் உள்ள மூலக்கூறுகள்

உலகளவில் தேநீர் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தேநீரில் உள்ள திஃப்ளேவின்கள், டானின்கள், கேடசின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் ஆரோக்கிய நன்மைகளைத் தரும் முக்கிய கூறுகளாகும். பாலைச் சேர்க்கும் போது தேநீரில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகளின் தாக்கமானது தேநீரின் அளவு, வகை, மற்றும் பால் டீ தயாரிக்கும் முறை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்ததாக அமைகிறது.

பால் டீயை அதிகளவு சூடுபடுத்தலாமா?

அதே சமயம், உகந்த வெப்பநிலைக்கு அப்பால் பால் டீயை சூடாக்கும் போது பல்வேறு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். இது பானத்தின் சுவை, ஊட்டச்சத்து போன்றவற்றைப் பாதிக்கலாம். தேயிலை இலைகள் கசப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால், மீண்டும் சூடுபடுத்துவது பால் தேநீரில் உள்ள சுவைகளின் நுட்பமான சமநிலையை எளிதில் சீர்குலைத்து விடும். மேலும் இந்த கலவைகள் பானத்தின் இனிப்பு மற்றும் நறுமணத்தை அதிகப்படுத்துகிறது. இது தேநீரின் தரத்தைக் குறைக்கலாம்.

பால் டீயை அதிகமாகக் கொதிக்க வைப்பதன் விளைவுகள்

பால் டீயை அதிகளவு கொதிக்க வைப்பது அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

ஊட்டச்சத்து இழப்பு

பால் டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி அருந்துவது பாலில் உள்ள வைட்டமின்கள் பி12 மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்து விடுகிறது.

தீங்கு தரும் கலவைகள் உருவாகுதல்

பால்டீயை அதிகமாக சூடுபடுத்துவது மெயிலார்ட் எதிர்வினையைத் தூண்டுகிறது. இது பாலில் உள்ள லாக்டோஸ் போன்ற புரதங்களுடன் வினைபுரிகிறது. இதனைக் காலப்போக்கில் அதிகளவு உட்கொள்வது ஆபத்தான கலவைகளை உருவாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Iron Boosting Seeds: இரும்புச்சத்து கம்மியா இருக்கா? இந்த விதைகளை சாப்பிடுங்க

மறைமுகமான புற்றுநோய்கள்

அதிக வெப்பத்தால் அக்ரிலாமைடு போன்ற கலவைகள் உருவாகலாம். அதிலும், குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் இருப்பின் அக்ரிலாமைடு ஒரு மறைமுகமாக புற்றுநோயாக மாறுகிறது.

சுவை மறுபரிசீலனை

பாலை அதிகமாகக் கொதிக்க வைப்பதால், சுவைத்தன்மையை மாற்றுகிறது. இது விரும்பத்தகாததாக மாற்றலாம்.

அமிலத்தன்மை மற்றும் pH மாற்றங்கள்

பால் டீயை அதிகமாகக் கொதிக்க வைக்கும் போது, அது அதிகமாக அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இது வயிற்று அசௌகரியம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படலாம்.

செரிமான பிரச்சனை

அதிக கொதிநிலையால் பாலில் உள்ள புரதங்கள் சிதைவடையலாம். இது கட்டமைப்பை மாற்றி, செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

பொதுவாக, பால் டீயை எப்போதாவது அதிகம் கொதிக்க வைப்பது ஆபத்தானதாக இருக்காது. ஆனால் இதைத் தொடர்ந்து இவ்வாறு செய்வது ஊட்டச்சத்துக்களைக் குறைப்பதுடன், பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால், பால்டீயை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Health Tips: மழைக்காலங்களில் செரிமானத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றுங்கள்!

Image Source: Freepik

Read Next

மட்டன் சாப்பிட்ட பிறகு மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.!

Disclaimer