How To Eat Garlic On Empty Stomach: சில உணவுப் பொருள்கள் இயற்கையாகவே பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதால், இவை உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையிலேயே தினமும் நாம் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் பூண்டும் அடங்கும். பூண்டு பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களை அருமருந்தாகும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை தருகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடல் எடை இழப்பு உட்பட பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது.
பூண்டின் ஊட்டச்சத்துக்கள்
பூண்டு பற்கள் ஒவ்வொன்றும் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது தவிர, ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள், பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் போன்றவை உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வது உடலுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Dry Fruits Tips: உலர் பழங்களை இப்படி சாப்பிட்டால் அதீத நன்மைகள்
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துகிறது. இந்தப் பதிவில் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
செரிமானத்திற்கு உதவ
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவும். இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் எடை குறைய விரும்புவோர்கள், தினமும் வெறும் வயிற்றில் பூண்டு எடுத்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
உணவுப் பொருளான பூண்டினை தினமும் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி பல்வேறு நோய்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: High Cholesterol Foods: உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கா? இந்த உணவுகளை எடுக்க வேண்டாம்….
சளி மற்றும் இருமலைக் குணப்படுத்த
பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு அளிக்கிறது. இவற்றில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மிகவும் உதவுகின்றன.
கண் ஆரோக்கியத்திற்கு
பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், கண் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இதய நோய்க்குத் தீர்வாக
உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதாக அமையும் பூண்டு, இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இது இதயக் குழாய்களில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான நோய்களிலிருந்து தங்களைக் காக்க பூண்டு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Avoid Eating Tomatoes: இவர்கள் அனைவரும் தக்காளி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது!
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
உணவுப் பொருளான பூண்டினை தினமும் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி பல்வேறு நோய்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.
காசநோய்க்குப் பயனாக
பூண்டு பயன்படுத்துவதன் மூலம் காசநோய் போன்ற சுவாசப் பாதையில் ஏற்படும் சளித்தொல்லையைக் குணப்படுத்த உதவுகிறது. அதன் படி, தினமும் பூண்டு சாப்பிட்டு வருவதன் மூலம் காசநோய் தொடர்பான அறிகுறிகளைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!
Image Source: Freepik