தக்காளி காய்கறி வகைகளை சேர்ந்தவரை என்றாலும் இது பழங்களின் வகைகளிலும் இடம்பெறுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பளபளப்பான நிறம், தேவையான சுவை உடன் பல ஆரோக்கிய நன்மைகளை இது கொண்டிருக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸினேற்றங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கு நிரம்பிய தக்காளி சமையலுக்கு அத்தியாவசிய பொருளாகும்.
இருப்பினும் தக்காளியை எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட நபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தெந்த நோய் உள்ளவர்கள் தக்காளியை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் GERD
ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) ஆகிய நோய்கள் உள்ளவர்கள் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்ட தக்காளியை உட்கொண்டால் அசௌகரியமான அல்லது மோசமான அறிகுறிகளை அனுபவிக்கலாம் என ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் டாக்டர் எட்வினா ராஜ் (பெங்களூரூ) கூறினார்.
தக்காளியன் அதிக அமிலத் தன்மை நெஞ்சரிச்சலைத் தூண்டலாம். அதேபோல் ஏற்கனவே உள்ள ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை அதிகப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்கள் தக்காளி சாப்பிடுவதற்கு முன்னாள் சுகாதார நிபுணர்களை அணுகுவது மிக நல்லது.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS)
வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி படி , தக்காளியை அதிக அளவில் உட்கொள்ளும் போது, IBS உடைய சில நபர்களுக்கு செரிமானக் கோளாறு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. IBS உடையவர்கள் தங்கள் அறிகுறிகளைக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் அசௌகரியத்தைத் தடுக்க தக்காளி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதும் நல்லது.
ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மை
ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மை என்பது உடலின் ஹிஸ்டமைனை சரியாக வகைப்படுத்தும் ஒரு நிலையாகும். ஹிஸ்டமைன் என்பது மூலக்கூறு செல்களுக்கு இடையே உருவாகும் ஒரு செயல்பாடாகும். தக்காளி ஹிஸ்டமைன் உணவாகக் கருதப்படுகிறது. ஹிஸ்டமைன் பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி சாப்பிட்டால் தலைவலி, தோல் வெடிப்பு, நாசி நெரிசல் அல்லது இரைப்பை குடல் தொந்தரவுகள் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
சிறுநீரக கற்கள்
கால்சியம் ஆக்சலேட் கற்கள் போன்ற சில வகையான சிறுநீரகக் கற்கள் பிரச்சனைகள் உள்ளவர்கள் தக்காளி சாப்பிட்டால் கூடுதல் பாதிப்படையலாம். தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன, அவை தக்காளியில் இயற்கையாக நிகழும் பொருட்கள் ஆகும். எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு சிறுநீரக கற்களை வேகமாக உருவாக்கும் தன்மை கொண்டது.
ஒவ்வாமை அறிகுறிகள்
ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், சில தனிநபர்கள் தக்காளிக்கு ஒவ்வாமை அல்லது உணர்திறனை உருவாக்கலாம். தக்காளி ஒவ்வாமை அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். தோல் வெடிப்பு, அரிப்பு, படை நோய், வீக்கம் அல்லது இரைப்பை குடல் தொந்தரவுகள் என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற விளைவுகளை சந்திக்க நேர்ந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
தக்காளி பொதுவாக சத்தான மற்றும் நன்மை பயக்கும் உணவாகக் கருதப்பட்டாலும், தனிநபர்கள் எச்சரிக்கையுடன் அவற்றின் நுகர்வுகளை குறைக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள நோய்கள் உள்ளவர்கள் தக்காளி எடுத்துக் கொள்ளும் முன் உணவியல் நிபுணரை ஆலோசிப்பது மிக நல்லது.