உங்க உணவில் கட்டாயம் இந்த ஊட்டச்சத்து இருக்கணும்.. ஏன் தெரியுமா?

Why does potassium need to be taken with food: உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை ஆதரிக்கவும், தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்யவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உங்க உணவில் கட்டாயம் இந்த ஊட்டச்சத்து இருக்கணும்.. ஏன் தெரியுமா?

Why is it good to have potassium in your diet: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஏராளம் உள்ளது. அவை ஒவ்வொன்றுமே உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறு மனித உடலில் பல்வேறு உடலியல் செயல்முறைகளைப் பராமரிப்பதற்கு பொட்டாசியம் சிறந்த தேர்வாகும். இது ஒரு முக்கிய கனிம மற்றும் எலக்ட்ரோலைட் ஆக செயல்படுகிறது. பொட்டாசியம் ஊட்டச்சத்துக்களானது திரவ சமநிலை, நரம்பு சமிக்ஞைகள் மற்றும் தசை சுருக்கங்கள் போன்றவற்றை சீராக்க உதவுகிறது.

அதன் படி கீரை, வாழைப்பழங்கள், பீன்ஸ், வெண்ணெய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகளில் அதிகளவிலான பொட்டாசியம் உள்ளது. இதை உட்கொள்வது இதய ஆரோக்கியம், சிறுநீரக செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த செல்லுலார் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமாகும். இது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை ஆதரிக்க உதவுகிறது. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயல்பாட்டையும் உறுதி செய்கிறது. அவ்வாறு அன்றாட உணவில் பொட்டாசியம் ஏன் பிரதானமாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காணலாம்.

பொட்டாசியம் ஏன் உணவில் பிரதானமாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்

உடலில் திரவ அளவை ஒழுங்குபடுத்த

உடலின் திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு, பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் சோடியத்துடன் இணைந்து செயல்படுகிறது. சரியான செரிமானம், ஆரோக்கியமான செல் செயல்பாடு மற்றும் உகந்த இரத்த அளவை பராமரிப்பதற்கு திரவ சமநிலை அவசியமானதாகும். பொட்டாசியத்தைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் குறிப்பாக வெப்பமான காலநிலையிலோ அல்லது உடற்பயிற்சியின் போதோ ஏற்படும் வீக்கம், திரவம் தேங்குதல் மற்றும் நீரிழப்பு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் இதய பிரச்னையின் அறிகுறிகள்

சிறுநீரக கற்களிலிருந்து பாதுகாக்க

பொட்டாசியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை சிறுநீரில் கால்சியம் இழப்பைக் குறைக்க உதவுகிறது. இது கால்சியம் சார்ந்த சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இது உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதை ஊக்குவிக்கவும், காலப்போக்கில் சிறுநீரக ஆரோக்கியத்தையும் சிறுநீர் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.

தசைப்பிடிப்பு மற்றும் பலவீனத்தைத் தடுப்பதற்கு

தசைச் சுருக்கம் மற்றும் தளர்வுக்கு பொட்டாசியம் மிகவும் முக்கியமானதாகக் கூறப்படுகிறது. குறைபாடு வலிமிகுந்த பிடிப்புகள், தசைப்பிடிப்பு மற்றும் பொதுவான பலவீனத்திற்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, உடல் ரீதியாக சுறுசுறுப்பான நபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றோர் தசை மீட்சியை ஆதரிக்கவும், உடற்பயிற்சிகளின் போது தசைப்பிடிப்பைத் தடுக்கவும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பயனடைகின்றனர்.

நரம்பு மண்டல செயல்பாட்டை ஊக்குவிக்க

நரம்பு மண்டலம் மின் சமிக்ஞைகளை செயல்படுத்துவதன் மூலம் மூளைக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்புக்கு வழிவகுக்கிறது. செல் சவ்வுகளில் மின்வேதியியல் சாய்வை பராமரிப்பதன் மூலம் பொட்டாசியம் இந்த சமிக்ஞைகளை கடத்துவதற்கு வழிவகுக்கிறது. இந்நிலையில் போதுமான பொட்டாசியம் இல்லாமல், நரம்பு தூண்டுதல்கள் மந்தமாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ அனிச்சைகள், மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கலாம்.

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஏனெனில் குறைந்த பொட்டாசியம் அளவு உள்ளவர்கள் இன்சுலின் எதிர்ப்புக்கு ஆளாகலாம். இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் துணைப் பங்காற்றுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க வாழைப்பழம் உதவுமா? வேறு என்னென்ன உணவுகள் உதவும் தெரியுமா?

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க

சீரான பொட்டாசியம் உட்கொள்ளலின் மூலம் இதய தசைகள் சரியாக சுருங்குவது, வழக்கமான தாளத்தை பராமரிப்பதையும் உறுதி செய்யலாம். குறைந்த பொட்டாசியம் அளவுகளால், இதய செயல்பாட்டை சீர்குலைத்து, அரித்மியா அல்லது திடீர் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கலாம். வழக்கமான பொட்டாசியம் நுகர்வின் மூலம் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலம். மேலும் இது நீண்டகால இருதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த

உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய பங்களிக்கும் சோடியத்தின் விளைவுகளை எதிர்ப்பதற்கு பொட்டாசியம் சிறந்த தேர்வாகும். இது இரத்த நாளச் சுவர்களைத் தளர்த்தி, சிறுநீர் வழியாக சோடியம் வெளியேற்றத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்த அளவை நிர்வகிக்கவும், குறைக்கவும் செய்யலாம். இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொடர்புடைய இருதய பிரச்சினைகளைத் தடுப்பதற்கான சக்திவாய்ந்த ஊட்டச்சத்தாக விளங்குகிறது.

எலும்பு அடர்த்தியை மேம்படுத்துவதற்கு

உடலில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்க பொட்டாசியம் சிறந்த தேர்வாகும். இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற உதவுகிறது. கால்சியம் இருப்புகளைப் பாதுகாப்பதற்கும், தாது உறிஞ்சுதலை அதிகரிப்பதற்கும் உதவுவதன் மூலம் இது வலுவான, ஆரோக்கியமான எலும்புகளுக்கு பங்களிக்கிறது. மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தில் உள்ள வயதானவர்களுக்கு மிகவும் முக்கியமாகும்.

இந்த பொட்டாசியம் நிறைந்த உணவுகள் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது போன்ற ஆரோக்கியமான நன்மைகளைப் பெற, அன்றாட உணவில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Potassium Rich Fruits: பொட்டாசியம் நிறைஞ்சியிருக்கு... வெயில் காலத்தில் இந்த பழங்களைச் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

Image Source: Freepik

Read Next

கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்க உங்க சமையலில் இந்த எண்ணெய்களை சேர்த்துக்கோங்க

Disclaimer