Fat Burn Drinks: இடுப்பு மற்றும் வயிறு கொழுப்பு குறையணுமா.? சூப்பர் டிரிங்க்ஸ் இங்கே…

  • SHARE
  • FOLLOW
Fat Burn Drinks: இடுப்பு மற்றும் வயிறு கொழுப்பு குறையணுமா.? சூப்பர் டிரிங்க்ஸ் இங்கே…


Drinks To Reduce Hip Fat And Belly Fat: ஒரு நல்ல உடற்பயிற்சி அல்லது உணவு கட்டுப்பாடுடன் கூடிய பயிற்சி செய்தாலும், சிலருக்கு உடல் எடையை குறைப்பது கடினமாக இருக்கும். குறிப்பாக இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் உள்ள கொழுப்பை குறைப்பது கடினமாக இருக்கும். இந்த நிலையில் சில பானங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை தரலாம். அத்தகையா பானங்கள் குறித்து இங்கே காண்போம்.

எலுமிச்சை மற்றும் ஓம நீர்

எலுமிச்சை நீர் என்பது பழங்காலத்திலிருந்தே எடை இழப்புக்காக நிரூபிக்கப்பட்ட பானம். இது சுவையில் மட்டுமின்றி உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது. பானத்தை சக்தியூட்ட, உங்களுக்கு கொஞ்சம் ஓமம் மட்டுமே தேவை. 1-2 டேபிள் ஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் விடவும். மறுநாள் காலை, நன்கு கலந்து, அதனுடன் எலுமிச்சை சேர்க்கவும். சுவையை அதிகரிக்க நீங்கள் தேனையும் சேர்க்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த பானம், உங்கள் தொப்பை கொழுப்பை எந்த நேரத்திலும் கரைக்க உதவும்.

இதையும் படிங்க: Weight Loss Tips: ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

பிளாக் டீ

உங்களின் வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள உடல் கொழுப்பை அகற்ற விரும்பினால் பிளாக் டீ குடிக்கலாம். 2,734 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஃபிளாவனாய்டு நிறைந்த உணவுகள் மற்றும் பிளாக் டீ போன்ற பானங்களை அதிகமாக உட்கொள்பவர்கள், குறைந்த ஃபிளாவனாய்டுகளை உட்கொள்ளும் பெண்களைக் காட்டிலும், உடல் கொழுப்பு மற்றும் தொப்பைக் கொழுப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கிரேப் ஜூஸ்

ஒரு மாதமாக உடற்பயிற்சி செய்தும், வயிறு மற்றும் இடுப்பு பகுதியை குறைக்க முடியவில்லையா? அப்போ கிரேப் ஜூஸ் குடிக்கவும். வாண்டர்பில்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உணவுக்கு முன் அரை கப் கிரேப் ஜூஸ் குடிப்பவர்கள், தண்ணீர் குடிப்பவர்களை விட அதிக எடையைக் குறைப்பதாகக் கண்டறிந்துள்ளனர். எனவே, கிரேப் ஜூஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முலாம்பழம் ஜூஸ்

சில முலாம்பழம் துண்டுகளை ஒரு மிக்ஸரில் அரைத்து ஒரு கிளாஸில் ஊற்றவும். சாற்றை வடிகட்டுவதைத் தவிர்க்கவும். முலாம்பழம் சாறு உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Image Source: Freepik

Read Next

Iodine: ஆரோக்கிய நன்மைகளும்… பக்க விளைவுகளும்…

Disclaimer

குறிச்சொற்கள்