உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பையும் குறைத்து ஒல்லியாகவும் கட்டுக்கோப்பாகவும் மாற வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கிறது. இதில் குறிப்பாக தொங்கும் தொப்பையை குறைக்க வேண்டும் என பலரது விருப்பம் இருக்கும். அப்படியே தொப்பையை குறைத்தாலும், வயிற்றை சுற்றி டயர் மாட்டியது போல் இருக்கும் இடுப்பு கொழுப்பை குறைக்க கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இத்தகைய இடுப்பு கொழுப்பை குறைப்பது அவ்வளவு எளிது இல்லையென்றாலும் முயற்சி செய்தால் குறைக்கலாம். ஆனால் எந்தவொரு முயற்சியும் விடாமுயற்சியாக இருக்க வேண்டியது சிறப்பு. ஆரம்பத்தில் முயற்சி செய்து அது குறைய வேண்டிய நேரத்தில், குறையவே இல்லை என மன வேதனை அடைந்து முயற்சியை கைவிடுபவர்கள் ஏராளம். எனவே எந்த சூழ்நிலையிலும் முயற்சியை கைவிடக் கூடாது.
அதிகம் படித்தவை: Healthy Heart: உங்க இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்!!
இடுப்பு கொழுப்பை வேகமாக குறைப்பது எப்படி?
அதிவேகமாக இடுப்பு கொழுப்பை குறைக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அதனால் கிடைக்கும் பலன்களை இப்போது பார்க்கலாம்.
சமச்சீரான உணவுமுறை
இடுப்பு பகுதியை சுற்றியுள்ள தசைகளை குறைக்க மிக முக்கியமான ஒன்று உணவுமுறை தான். பழங்கள், காய்கறிகள், கீரைகள், மெலிந்த புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை தினசரி சாப்பிட வேண்டும். சர்க்கரை தின்பண்டங்கள், வெளிப்புற உணவுகள், அதிக கலோரி நிறைந்த உணவுகளை சுத்தமாக குறைக்க வேண்டும். அதோடு நீரேற்றமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
உணவு அளவில் கவனம் தேவை
தினசரி நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அதை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உணவு உண்ணும் முன் உங்கள் கட்டுப்பாட்டை மனதளவில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணவை பரிமாறும் போது சிறிய தட்டுகளைப் பயன்படுத்துங்கள், இது அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும். அதேபோல் தண்ணீர் லேசாக குடிப்பதும் உணவு அதிகம் உட்கொள்வதை தவிர்க்க உதவும்.
சர்க்கரை பானங்களை குறைக்கவும்
உடல் எடையை குறைப்பதற்கான விரைவான வழிகளில் ஒன்று உங்கள் தினசரி உணவில் இருந்து கலோரிகளைக் குறைப்பதாகும். சர்க்கரையை முற்றிலுமாக கைவிடுவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவிாக இருக்கும். சோடாக்கள், எனர்ஜி பானங்கள் மற்றும் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும் இனிப்பு பானங்கள் போன்ற சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பது என்பது முற்றிலும் நல்லது.
தினசரி உடற்பயிற்சி
தினசரி உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் உடற்பயிற்சி என்பது. தினமும் ஒர்க் அவுட் செய்தால் உடல் எடை விரைவில் குறையும். குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சி உங்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கார்டியோ பயிற்சி செய்வது நல்லது. அதேபோல் விரைவாக உடல் எடையை குறைக்க நடைபயிற்சி, ஜாக்கிங் மற்றும் சைக்கிளிங் ஓட்டுதல் ஆகியவை சிறந்த தேர்வாகும்.
போதுமான தூக்கம் மிக முக்கியம்
மனித வாழ்விற்கு போதுமான தூக்கம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. போதுமான தூக்கம் இல்லாதது பசியின் ஹார்மோன்களைத் தொந்தரவு செய்யும், அதேபோல் செரிமான பிரச்சனையில் சிக்கல் ஏற்படுத்தி வயிறு உப்பசம் போன்ற பிரச்சனையை சந்திக்க வைக்கும். தினசரி 7-8 மணிநேரம் தூக்கம் என்பது மிக முக்கியமாகும்.
மன அழுத்தம்
உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் மன ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மன அழுத்தத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். மன அழுத்தம் என்பதும் வயிற்றில் கொழுப்பு சேருவதற்கு முக்கிய பங்காகும். மன அழுத்தத்தை நிர்வகிக்க ஒவ்வொரு நாளும் தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற பயிற்சி செய்யவும்.
இதையும் படிங்க: வாரத்திற்கு ஒரு முறை போதும்.. அளப்பரிய நன்மைகள் கிட்டும்.! என்னவா இருக்கும்.?
இந்த வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வது, உங்கள் இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
pic courtesy: freepik