Is Eating Raw Onion Good For Health: பெரும்பாலான உணவு வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் பச்சை வெங்காயம் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான உணவு வகைகளில் காணப்படும் அத்தியாவசியப் பொருளாகும். இது வெள்ளை, மஞ்சள், சிவப்பு என பல்வேறு வண்ணங்களில் வருகிறது. இதன் தனித்துவமான சுவை மற்றும் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
தற்போதெல்லாம் பழைய சோறு என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது பச்சை வெங்காயம் தான். அன்றாட உணவில் பச்சை வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு பச்சை வெங்காயம் தரும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
பச்சை வெங்காயத்தின் ஊட்டச்சத்துகள்
பச்சை வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதன் படி, 100 கிராம் பச்சை வெங்காயத்தில் 82% நீர்ச்சத்து, 1.2% புரதம், 47 மிகி கால்சியம் மற்றும் 50 மிகி பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. மேலும் இதில் 0.7 மிகி இரும்புச்சத்தும், வைட்டமின் பி, சி போன்றவையும் காணப்படுகிறது. இது தவிர பச்சை வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் க்வெர்செடின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pineapple Juice Benefits: அன்னாசிப்பழச் சாறு குடிச்சா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்
பச்சை வெங்காயத்தை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் ஆரோக்கியத்திற்கு பச்சை வெங்காயம் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இதய ஆரோக்கியம்
வெங்காயத்தில் குர்செடின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தடுக்கலாம்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு
வெங்காயத்தில் சல்பர் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. இவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய் அபாயத்தைத் தடுக்கிறது.
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
பச்சை வெங்காயம் வைட்டமின் சி நிறைந்த நல்ல மூலமாகும். இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. இதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்த்தொற்றுக்களைத் தடுக்கவும் பச்சை வெங்காயம் உதவுகிறது.
செரிமான மேம்பாட்டிற்கு
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. இவை செரிமான மேம்பாட்டிற்கு நன்மை பயக்கும். எரிச்சல், மலச்சிக்கல் போன்ற குடல் நோய்க்குறி மற்றும் மூல நோய் போன்ற பல்வேறு வகையான நோய்களைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ragi Soup Recipe: ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடல் எடை குறைப்பு வரை எல்லா பிரச்சினைக்கும் இந்த ஒரு சூப் போதும்!
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க
பச்சை வெங்காயத்தில் உள்ள சல்பர் சேர்மங்கள், மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இவை மூளையில் நரம்பியல் கடத்திகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மேம்பட்ட நினைவாற்றல், கவனம் செலுத்துதல் நிலைகளுக்கு வழிவகுக்கிறது.
எடை இழப்புக்கு
குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்களைக் கொண்ட பச்சை வெங்காயம் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன் பசியிழப்பைத் தருகிறது. மேலும் இது அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடையை இழக்கலாம்.
நீரிழிவு நோயைக் குறைக்க
இதில் உள்ள குரோமியம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் முக்கியமான தாதுப்பொருளாகும். இவை இன்சுலின் செயல்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய் அபாயத்தைத் தடுக்கலாம்.
வீக்கத்தைக் குறைக்க
குவெர்செடின் நிறைந்த பச்சை வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சி அளவைக் குறைக்க உதவுகிறது. இவை ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் கீல்வாதம் போன்ற நிலைமைகளை நிர்வகிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Foods: மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு இந்த உணவெல்லாம் எடுத்துக்கோங்க.
சரும ஆரோக்கியத்திற்கு
பச்சை வெங்காயத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இவை சுருக்கங்கள் போன்ற முதுமை அறிகுறிகள் மற்றும் நிறமி அளவைக் குறைக்க உதவுகிறது. இவை ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கும்.
கேன்சர்
இவற்றின் சல்பர் நிறைந்த கலவைகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. அல்லிசின், குவெர்செடின் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்றவை உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். மேலும், இவை புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளது.
இவ்வாறு தினசரி உணவுமுறையில் பச்சை வெங்காயத்தை எடுத்துக்கொள்வது, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வைப்பதுடன், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Laziness in Winter: குளிர்காலத்தில் சோர்வாக உணர்கிறீர்களா?… இந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!
Image Source: Freepik