Is It Healthy To Eat Peanuts Daily: அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவுகளின் மூலம் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் தினமும் வேர்க்கடலை சாப்பிடுவது நீரிழிவு நோய், மூளை செயல்பாடு, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக உதவுகிறது. மேலும், இது எடையை நிர்வகிப்பதில் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வேர்க்கடலை தரும் அற்புத நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
இது சிறிய மற்றும் வலிமையான பருப்பு வகையாகும். இன்று பெரும்பாலானோர் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளும் இந்த நிலக்கடலை சுவைக்கு அப்பால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டு விளங்குகிறது. இதற்கு இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களே காரணமாகும். இதில் தினசரி வாழ்க்கையில் நிலக்கடலை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
வேர்க்கடலை ஊட்டச்சத்துக்கள்
இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Raw Onion Benefits: இதய நோய் முதல் கேன்சர் வரை.. பச்சை வெங்காயம் தரும் அற்புத நன்மைகள்.!
தினந்தோறும் வேர்கடலை சாப்பிடுவதன் நன்மைகள்
நீரிழிவு நோய்க்கு
பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா என்ற கேள்வி எழும். ஆனால், இதை வழக்கமாக உட்கொள்வது, டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், பயோஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை மேம்பட்ட இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் பங்களிக்கிறது. நிலக்கடலையை சமச்சீர் உணவில் சேர்த்துக் கொள்வது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
வேர்க்கடலை நார்ச்சத்துக்களின் சிறந்த ஆதார மூலமாகும். இவை ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கிறது. இதன் வழக்கமான நுகர்வு, வழக்கமான குடல் இயக்கததை ஊக்குவிக்கிறது. மேலும் இது நன்மை தரக்கூடிய குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிப்பதுடன், மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள ப்ரீபயாடிக் பண்புகள், குடல் மைக்ரோபயோட்டாவை வளர்த்து, ஆரோக்கியமான குடல் சூழலுக்கு பங்களிக்கிறது. எனவே அன்றாட உணவில் வேர்க்கடலை சேர்த்துக் கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
ஆற்றலை அதிகரிக்க
வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இவை சிறந்த ஆற்றல் மூலமாக விளங்குகிறது. வேர்க்கடலையில் உள்ள டயட்டரி ஃபைபர் மற்றும் மேக்ரோநியூட்ரியன்ட்ஸ் போன்றவற்றின் கலவையானது நிலையான ஆற்றல் வெளியீட்டைத் தருகிறது. எனவே உடல் சோர்வாக இருக்கும் நேரங்களில் வேர்க்கடலை எடுத்துக் கொள்வது, சரியான இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது.
எடை மேலாண்மைக்கு
இவை தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். சைவ உணவு உண்பவர்கள் மற்றும் புரத உட்கொள்ளலை அதிகரிக்க விரும்புபவர்கள் வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம். இவை அத்தியாவசியமான மேக்ரோ நியூட்ரியண்டுகளை வழங்குகிறது. மேலும் உடலில் தசை வளர்ச்சி, பழுதுபார்ப்பு, உடல் பராமரிப்பிற்கு புரதம் முக்கியமானதாகும். எடை நிர்வகிக்கும் நோக்கத்தில் உள்ளவர்களுக்கு வேர்க்கடலை சிறந்த ஆதாரமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Kadalai Mittai Benefits: குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள்!
இதய ஆரோக்கியத்திற்கு
வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை நல்ல கொழுப்புகள் ஆகும். மேலும், இது தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம். உணவில் சிறிதளவு வேர்க்கடலையைச் சேர்ப்பது ஆரோக்கியமான இதயத்தை மேம்படுத்துகிறது.
மூளைத் திறன் அதிகரிக்க
வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி3 ஊட்டச்சத்துக்கள் அறிவாற்றல் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. மேலும், வயது தொடர்பான அறிவாற்றல் இழப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது. எனவே மூளைக்குத் தேவையான இயற்கை ஊட்டச்சத்துக்களைப் பெறவும், நீண்டகால ஆரோக்கியத்திற்கும் வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம்.
இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தருவதால், வேர்க்கடலையை தினமும் எடுத்துக் கொள்ளலாம். எனினும் வேர்க்கடலை கலோரி அடர்த்தியானது என்பதால், பகுதிக் கட்டுப்பாடு முக்கியமானதாகும். வேர்க்கடலையின் இயற்கையான நன்மைகளைப் பெறவும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வேர்க்கடலையை கட்டுப்பாட்டுடன் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Peanuts Benefits: குளிர்காலத்தில் வேர்கடலை எவ்வளவு நல்லது தெரியுமா?
Image Source: Freepik