Peanuts Benefits: குளிர்காலத்தில் வேர்கடலை எவ்வளவு நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Peanuts Benefits: குளிர்காலத்தில் வேர்கடலை எவ்வளவு நல்லது தெரியுமா?

வேர்கடலையில் அமினோ அமிலம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, வைட்டமின் பி3,ஈ, நியாசின் மற்றும் புரோட்டீன் போன்ற எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே காண்போம். 

புற்றுநோய் அபாயம் குறையும்

வேர்கடலையில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும். தினமும் சிறிது வேர்கடலை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். 

இதையும் படிங்க: Macadamia Nuts Benefits: மக்காடமியா நட்ஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

எலும்பு வலுவாகும்

வேர்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம், எலும்புகளை வலுப்படுத்தும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர, வயது முதிர்ந்த பின்னும் எலும்பு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது. 

சருமத்தை பாதுகாக்கும்

வேர்கடலையில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள், உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்ஸால் ஏற்படும் சேதத்தில் இருந்து காக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி3 மற்றும் நியாசின், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்

வேர்கடலையில் உள்ள எல்-அர்ஜினைன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் முடி உதிர்வு குறைந்து, முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். 

உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் வேர்கடலையை சாப்பிட வேண்டும். மேலும் நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தால், வேர்கடலையை சாப்பிடும் முன் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். 

Image Source: Freepik

Read Next

பருப்பு சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்