அன்றாட வாழ்வில் அரிசி சாதம் சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சூடான சாதத்தை சாப்பிட யார் தான் விரும்ப மாட்டார்கள். பலருக்கும், இது ஒரு ஆறுதல் உணவாக அமைகிறது. எனினும், அரிசி உட்கொள்வது நீண்ட காலமாக கட்டுக்கதைகளால் சூழப்பட்டுள்ளது. பொதுவாக, அரிசி சாதத்தை சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும் என்றாலும், அது உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் என பலரும் நம்புகின்றனர்.
மேலும் அரிசி சாதம் உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அரிசி சாதம் சேர்ப்பதற்கு தயங்குகின்றனர். இதில் அரிசி சாதத்தை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Rice Benefits: சுடு சாதம் Vs ஆறிய சாதம் - ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
நிபுணரின் கருத்து
நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள், அரிசி சாதம் சாப்பிடுவதற்கான ஒரு எளிய குறிப்பைப் பகிர்ந்துள்ளார். இது அரிசியை அதன் வழக்கமான தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் குற்ற உணர்ச்சியின்றி அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது.
சமீபத்திய பதிவு ஒன்றில் திருமதி முகர்ஜி அவர்கள், அரிசி சமைக்கப்பட்டு சேமிக்கப்படும் விதம் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று விளக்கினார். அவரது கூற்றுப்படி, "வேகவைத்த அரிசியை விரைவாக குளிர்வித்து குளிர்சாதன பெட்டியில் வைப்பது எதிர்ப்பு ஸ்டார்ச் உருவாக வழிவகுக்கிறது" என்று கூறி தனது பதிவைத் தொடங்கியுள்ளார்.
எதிர்ப்பு ஸ்டார்ச் என்பது சிறுகுடலில் செரிமானத்தை எதிர்க்கக்கூடிய ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும். இவை பெரிய குடலில் புளிக்க வைக்கிறது. மேலும் அவர், அரிசியை இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதன் பல நன்மைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் ஆனது அரிசியின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க உதவுகிறது. அதாவது அரிசியானது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதாக நிபுணர் கூறியுள்ளார். பொதுவாக, கிளைசெமிக் குறியீடு (GI) ஒரு உணவு உணவு சாப்பிட்ட பிறகு உடலில் இரத்த சர்க்கரையை எவ்வளவு விரைவாக உயர்த்துகிறது என்பதைக் காட்டுகிறது.
உதாரணமாக, வெள்ளை ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை பானங்கள் போன்றவை உடலில் இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கச் செய்கிறது. அதே சமயம், பழங்கள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள் மெதுவாக செரிமானம் அடைகிறது. மேலும் இது திடீர் சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தாது.
இந்த பதிவும் உதவலாம்: பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் சர்க்கரை குறையுமா? - என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பின் இரண்டாவதாக, இவை செரிமானத்தை மெதுவாக்குகிறது. மேலும் இது நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் பசி எடுப்பதைத் தடுக்கிறது என நிபுணர் கூறுகிறார். மூன்றாவதாக, இது திடீர் இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தவிர்க்க உதவுகிறது. இறுதியாக, இந்த வழியில் தயாரிக்கப்பட்ட அரிசியை மிதமாக சாப்பிடுவது எடை அதிகரிப்பை ஏற்படுத்தாது என நிபுணர் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும், ஊட்டச்சத்து நிபுணர் முகர்ஜி அவர்கள் அரிசி சாப்பிடுவதற்கான முறையை விளக்கினார். அவரின் கூற்றுப்படி,
- வழக்கம் போல் அரிசியை சமைத்து, விரைவாக குளிர்விக்க விடவும்.
- பின்னர், அதை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
இவ்வாறு நிபுணர் அரிசி சாப்பிடும் முறையை அறிவுறுத்தியுள்ளார். மேலும், சாப்பிடத் தயாரானதும், மீண்டும் சூடாக்கி சாப்பிட அறிவுறுத்துகிறார்.
எனவே, அடுத்த முறை அரிசியை சாப்பிட தயங்க வேண்டிய அவசியமில்லை. "அரிசியை சமைத்து, குளிரூட்ட, குளிர்சாதன பெட்டியில் வைத்து, மீண்டும் சூடாக்கு" என்ற சூத்திரத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று தனது பதிவில் கூறியுள்ளார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: நீரழிவு நோயாளிகள் அரிசியுடன் இதை ஒரு ஸ்பூன் கலந்துக்கிட்டா... சர்க்கரை அளவு ஏறவே ஏறாது!
Image Source: Freepik