எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த குறைந்த GI கொண்ட காய்கறிகளை சாப்பிடுங்க..

Low glycemic index vegetables list: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் படி, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, நாம் சாப்பிட வேண்டிய குறைந்த GI கொண்ட காய்கறிகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த குறைந்த GI கொண்ட காய்கறிகளை சாப்பிடுங்க..

Low glycemic index vegetables for diabetes: நாம் பெரும்பாலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க எளிய மற்றும் அன்றாட தீர்வுகளைத் தேடி வருகிறோம். ஆம். நீரிழிவு நோயால் போராடுபவர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க சர்க்கரை பானங்களை மாற்றுவது முதல், கூடுதல் இனிப்பு உட்கொள்ளலைத் தவிர்ப்பது வரை போராட்டமாகவே திகழ்கிறது. எனினும், ஆரோக்கியமான உணவுகளைக் கையாள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

அவ்வாறு, குறைந்த கிளைசெமிக் குறியீடு நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நீரிழிவு நோய்க்கு அவசியமானதாகும். ஏனெனில், குறைந்த GI உணவுகள் மெதுவாக ஜீரணமடைகிறது. இதனால், இரத்த சர்க்கரை அளவு மெதுவாக உயர்கிறது. மேலும் இது திடீர் இரத்த சர்க்கரை உயர்வு அல்லது தாழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுத் திட்டமிடலில் குறைந்த GI உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க குறைந்த GI கொண்ட காய்கறிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Foods: இத சாப்பிடுங்க… சுகர் ஏறவே ஏறாது!

நீரிழிவு நோய்க்கு ஏற்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டு காய்கறிகள்

கீரை

இலைக் கீரைகள் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது. கீரையின் கிளைசெமிக் குறியீடு 15 ஆகும். இதனால் இது திடீர் சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தாது. மேலும் கீரையில் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆய்வு ஒன்றில், பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவது டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்புகளைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே அன்றாட உணவில் ஸ்மூத்திகள், கறிகள், சாலடுகள் போன்ற பல்வேறு வழிகளில் கீரைகளைச் சேர்க்கலாம்.

சீமை சுரைக்காய்

இது பலரின் முதல் தேர்வாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கணிசமாக உதவுகிறது. இதில் குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. மேலும் இது அதிக நீர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதால் மிகவும் நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

சீமை சுரைக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக்குவதுடன், திடீர் குளுக்கோஸ் அதிகரிப்பைத் தடுக்கிறது. சீமை சுரைக்காயை சாப்பிடுவதற்கான மிகவும் எளிய வழியாக, அவற்றை நூடுல்ஸாக மாற்றலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடலாம்.

குடைமிளகாய்

இது மொறுமொறுப்பான மற்றும் சுவையான மிளகாய் வகையைச் சேர்ந்ததாகும். இது இரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய எளிய மற்றும் துடிப்பான வழியாகும். ஆய்வு ஒன்றில், குடைமிளகாய் குறிப்பாக சிவப்பு, உடலில் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது பச்சை சாலட்களில் சிறந்தவையாகும். இதை தனியே வறுத்த அல்லது பிடித்த காய்கறிகளுடன் வதக்கி சாப்பிடலாம். மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இவை ஒரு சரியான சிற்றுண்டியாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சுகர் லெவல் அதிகரிக்கும்னு கவலை வேணாம்.. சம்மரில் நீங்க சாப்பிட வேண்டிய குறைந்த GI பழங்கள் இதோ

காலிஃபிளவர்

கீரையைப் போலவே, காலிஃபிளவரும் அதன் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு பெயர் பெற்றதாகும். இதில் அதிக நார்ச்சத்துடன் 15 கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது மெதுவாக ஜீரணிக்க உதவுவதுடன், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதை அன்றாட உணவில் சூப், வறுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சேர்க்கலாம்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி சாப்பிடுவது உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில், ப்ரோக்கோலி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதாகவும், சல்ஃபோராபேன் நிறைந்ததாகவும் கூறப்படுகிறது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கவும், நீண்ட நேரம் திருப்திகரமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Diet: சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உள்ள 10 உணவுகள்!

Image Source: Freepik

Read Next

சர்க்கரை நோயை வரும் முன்பே தடுக்க... இந்த 3 விஷயங்கள உங்க அன்றாட உணவுல சேர்த்துக்கோங்க...!

Disclaimer