சுகர் லெவல் அதிகரிக்கும்னு கவலை வேணாம்.. சம்மரில் நீங்க சாப்பிட வேண்டிய குறைந்த GI பழங்கள் இதோ

Low glycemic index food for diabetic patients: பழங்களில் இயற்கையான சர்க்கரைகள் இருந்தாலும், அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்களையும் வழங்குகின்றன. குறைந்த கிளைசெமிக் குறியீட்டு (GI) கொண்ட பழங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
  • SHARE
  • FOLLOW
சுகர் லெவல் அதிகரிக்கும்னு கவலை வேணாம்.. சம்மரில் நீங்க சாப்பிட வேண்டிய குறைந்த GI பழங்கள் இதோ

Low glycemic fruits for diabetics: கோடைக்காலம் பெரும்பாலும் அனைவருக்கும் அசௌகரியத்தைத் தரக்கூடிய காலமாகவே அமைகிறது. எனினும் இது பல்வேறு வகையான பழங்களை வழங்கக்கூடிய காலமாகும். இதை நம் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். முதலில் இந்த பழங்கள் உடலுக்கு நீரேற்றத்தைத் தரக்கூடிய ஒரு சிறந்த மூலமாக விளங்குகிறது. இது கோடை வெப்பத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதன் படி, தர்பூசணி, முலாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பல பழங்களில் அதிகளவிலான நீர்ச்சத்துக்கள் உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

அடுத்ததாக பழங்களில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நீண்ட, சூடான நாட்களில் ஆற்றலை வழங்குகிறது. ஆனால் இது நீரிழிவு நோயாளிக்கும் நன்மை பயக்குமா என்ற கேள்வி எழுகிறதா? எனினும், நீரிழிவு நோயாளிகள் சரியான தேர்வுகளைச் செய்வதன் மூலம் பழங்களை பாதுகாப்பாக அனுபவிக்கலாம். பழங்களில் இயற்கை சர்க்கரைகள் காணப்பட்டாலும், அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. அதன் படி, குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் (GI) பழங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். ஏனெனில், இவை இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dry Fruits To Avoid Diabetic: சர்க்கரை நோயாளிகள் மறந்தும் இந்த ட்ரை ப்ரூட்ஸை சாப்பிடக்கூடாது?

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய குறைந்த கிளைசெமிக் உணவுகள்

கிளைசெமிக் குறியீடு (GI) என்பது குறிப்பிட்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பின், நாம் எடுத்துக் கொள்ளும் உணவு இரத்த சர்க்கரையில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் பழமானது பல்துறை திறன் கொண்டவையாகும். இது நிறைவான உணர்வைத் தருவதாகவும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகவும் அமைகிறது. குறிப்பாக, ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதை தோலுடன் சேர்த்து உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

வாழைப்பழம்

நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்றவற்றின் நல்ல மூலமாகும். மேலும் இதில் நன்மை பயக்கும் தாவர சேர்மங்களும் நிறைந்துள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழங்களை உட்கொள்ளலாம்.

செர்ரிகள்

செர்ரி பழங்களில் ஏராளம் உள்ளது. செர்ரிகளில் குறைந்த கிளைசெமிக் குறியீடு காணப்படுகிறது. மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த செர்ரி பழங்களை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Fruits: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்கள்

மாம்பழம்

ஆம். நீரிழிவு நோயாளிகள் மாம்பழங்களை மிதமான அளவில் சாப்பிடுவது நன்மை பயக்கும். மாம்பழத்தில் நல்ல அளவிலான நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகிறது. இவை இரத்த சர்க்கரையின் ஒட்டுமொத்த தாக்கத்தைக் குறைக்கக்கூடியதாகும். கூடுதலாக, இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு காணப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழங்களை மிதமான அளவு மற்றும் சிறிய அளவில் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

திராட்சை

திராட்சை பழத்தில் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு உள்ளது. மேலும் இதில் பல்வேறு வகையான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவது வீக்கத்தைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

பீச் பழங்கள்

புதிய பீச் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு சத்தானவை மட்டுமல்லாமல் மிதமான அளவில் சாப்பிடக்கூடியதாகும். மேலும் பீச் பழங்கள் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே போன்றவை நிறைந்த நல்ல மூலமாகும்.

நீரிழிவு நோயாளிகள் இந்த குறைந்த கிளைசெமிக் குறியீடு நிறைந்த பழங்களை சாப்பிடலாம். எனினும் அவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதிப்பது நல்லது. மேலும் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப பழங்களை உட்கொள்ள தங்கள் சுகாதார வழங்குநரை அணுகுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Fruits: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த பழங்களை சாப்பிடலாம்

Image Source: Freepik

Read Next

நீரிழிவு நோயாளிகள் மல்பெரி சாப்பிடலாமா.? மருத்துவரின் கூற்று இங்கே..

Disclaimer