வயதானதை எதிர்த்துப் போராடுவதற்கு சில ஆரோக்கியமான உணவுகள் உதவுகின்றன. இவை, முதுமை நிலையை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும், அவற்றை துரிதப்படுத்த அல்லது குறைக்க செயல்படுகிறது. சில ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும், சில தவறான பழக்க வழக்கங்களாலும் குறைந்த வயதிலேயே, அதிக வயதைக் கொண்டிருப்பவர்களைப் போல மாறி விடுவர். மேலும், அதிக வெப்பம், அதிக குளிர் போன்ற வானிலை மாற்றத்தின் காரணமாகவும் உடலில் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றை உணவு முறையில் கொண்டுவரக்கூடிய சில மாற்றங்களின் மூலம் தடுக்க முடியும்.
வயதாவதை எதிர்க்கும் உணவுகள்
ப்ளூபெர்ரி
வயதாவதை எதிர்த்துப் போராடுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ப்ளூபெர்ரி ஆகும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இளமையை நீண்ட காலம் பாதுகாக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் கடுமையான நோய்கள் மூலமும், வயதான வடிவத்தைத் தோற்றுவிப்பதிலும் உடலில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வகை ஃப்ரீ ரேடிக்கல்களை ப்ளூபெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாவதைத் தடுக்கிறது.
முக்கிய கட்டுரைகள்

இந்த பதிவும் உதவலாம்: குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
மாதுளை
வயது எதிர்ப்புக்கான உணவுப் பட்டியலில் அடுத்த முக்கிய பங்கு வகிப்பது மாதுளை. மாதுளையில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்பட்டு சூரிய ஒளியில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்த்துப் போராட வைக்கிறது. இது நம் உடலின் திறனை அதிகரிக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்திருக்க கொலாஜன் உதவுகிறது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியிலும், அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது வயது எதிர்ப்பு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. ப்ரோக்கோலியில் இண்டோல்ஸ், சல்ஃபோராபேன் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவை தோல் புற்றுநோயிலிருந்து குணப்படுத்த உதவுகிறது. மேலும், வயதான போதும் மூளையை சரியாக வேலை செய்ய ப்ரோக்கோலி உதவுகிறது. மேலும், இது எலும்பு முறிவு அபாயத்தையும் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தர்பூசணி
கோடை காலம் வந்து விட்டால், முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது தர்பூசணியே. இது தாகத்தைத் தணிப்பதற்கு மட்டுமல்லாமல் ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்பட்டு முதுமை எதிர்ப்புக்கு உதவுகிறது. மேலும், தர்பூசணியில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் காணப்படும்.
அவகேடோ
அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், வயது எதிர்ப்புக்கான சிறந்த உணவாகச் செயல்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ மற்றும் பி சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் வைட்டமின் ஈ சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு ஆரோக்கியமான சருமத்தைத் தருகிறது. இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளவையாக அமைகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்
Image Source: Freepik