Best high fiber fruits to eat: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்துக்கள் முக்கிய இடம் பெறுகிறது. உடல் எடையை நிர்வகிப்பது, வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிப்பது மற்றும் இதய ஆரோக்கியம் போன்ற பல்வேறு ஆரோக்கிய நலன்களுக்கு நார்ச்சத்துக்கள் உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே தான் அன்றாட உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அன்றாடம் சமைக்கும் சில காய்கறி வகைகளில் நார்ச்சத்துக்கள் உள்ளது.
எனினும் உங்களுக்குப் பிடித்த இனிப்பு பழங்களும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? சில பழங்கள் மற்றவற்றை விட சிறந்த ஆதாரங்களாகக் காணப்படும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்களின் கலவைகளைக் கொண்ட ஆதாரங்களைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய ஃபைபர் உணவுகள் இங்கே..
நார்ச்சத்துக்கள் என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?
நார்ச்சத்துக்கள் என்பது ஒரு தாவரத்தின் ஜீரணிக்க முடியாத பகுதியைக் குறிக்கிறது. அதாவது, இதை உட்கொள்ளும் போது உடலால் அதை செயல்படுத்தி எளிதில் உறிஞ்ச முடியாது. எனவே இது செரிமான பாதை வழியாகச் சென்று அப்படியே மலம் வழியாக உடலை விட்டு செல்கிறது.
நார்ச்சத்துக்களில் பொதுவாக இரண்டு வகைகள் உள்ளது. அவை கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்களாகும். இதில் கரையாத நார்ச்சத்துக்கள் மலத்தை அதிகப்படுத்தி, குடல் இயக்கத்தை எளிதாக்கக் கூடியதாகும். கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், தண்ணீரில் கலக்கும் போது ஜெல் போன்ற தன்மையை அடைந்து, செரிமானத்தை மெதுவாக்குகிறது. இந்த வகை நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி, இதய அபாயத்தைக் குறைக்கிறது. சில உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், கரையாத நார்ச்சத்துக்கள் தனித்தனியே அதிகம் காணப்பட்டாலும் சில உணவுகளில் இவை இரண்டுமே காணப்படும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள்
வாழைப்பழங்கள்
நமக்கு எளிதில் கிடைக்கும், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. இது நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் தவிர, பொட்டாசியம் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் வாழைப்பழங்கள் விரைவான சிற்றுண்டிக்கு ஏற்றது. இதை தானியங்கள், ஸ்மூத்திகளில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும்.
பேரிக்காய்
இது ஜூசி, இனிப்பு மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த பழவகையாகும். நடுத்தர அளவிலான பேரிக்காயில் 5 முதல் 6 கிராம் அளவிலான நார்ச்சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது செரிமான அமைப்புக்கு ஏற்றதாகும். கூடுதலாக பேரிக்காய் குறைந்த அளவிலான கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது சாலட்களில் சேர்த்து சிறிது சிறிதாக சாப்பிடலாம்.
ஆப்பிள்
ஆப்பிள்கள் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளுக்கு நன்கு அறியப்பட்ட பழமாகும். அதில் ஒன்றாகவே ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்துக்கள் ஆகும். குறிப்பாக ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும், இதில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை ஆரோக்கியமான சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Fiber Rich Foods: உங்க உடல் எடையை அசால்ட்டாக குறைக்க இந்த 5 உணவுகள் போதும்!
பப்பாளி
இது நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த மற்றொரு பழமாகும். ஒரு கப் அளவிலான பப்பாளியில் சுமார் 2.5 கிராம் அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பழத்தில் பப்பைன் என்ற நொதியும் உள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது. இதை ஆரோக்கியமான காலை உணவாக அல்லது புத்துணர்ச்சியூட்டும் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.
கொய்யா
அதிக நார்ச்சத்து கொண்ட பழங்களில் கொய்யாப்பழமும் ஒன்று. இது எளிதில் கிடைக்கக் கூடிய பழமாகும். ஒரு நடுத்தர அளவிலான கொய்யாவில் 5 கிராம் வரையிலான நார்ச்சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதை பச்சையாக அப்படியே சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்திகளில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு அதன் வைட்டமின் சி உள்ளடக்கத்திற்காக நன்கு அறியப்படுகிறது. இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த சிட்ரஸ் பழம் நீரேற்றம் மிக்கதாகவும், நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகவும் கருதப்படுகிறது. புதிய ஆரஞ்சு பழத்தை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் அல்லது சாறாக அருந்தலாம்.
இந்த நார்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் பல்வேறு உடல் நல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Fiber Rich Foods: இந்த உணவுகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்.!
Image Source: Freepik