Fiber Rich Foods: இந்த உணவுகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்.!

  • SHARE
  • FOLLOW
Fiber Rich Foods: இந்த உணவுகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்.!

பொதுவால நார்ச்சத்துகள் இரண்டு வலையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து, மற்றொன்று கரையா நார்ச்சத்து. கரையும் நார்ச்சத்துகள், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு அளை கட்டுப்படுத்தும். கரையா நார்ச்சத்துகள், குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் உட்கொள்ள வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் (Fiber Rich Foods)

ஆப்பிள்

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறுவர். இது உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கும். 

முழு தானியங்கள்

முழு கோதுமை ரொட்டி, முழு கோதுமை பாஸ்தா, பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றில் காணப்படும் உண்மையான முழு தானியங்களில் நார்ச்சத்து உள்ளது.

இதையும் படிங்க: High Protein In Diabetes: அதிக புரத உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வளவு ஆபத்தா? எப்படினு தெரிஞ்சிக்கோங்க

அவகேடோ

அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. 

பெர்ரி

பெர்ரி அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகளுக்கு பெயர் பெற்றதாகும். அவுரிநெல்லி,  ப்ளாக்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரம் ஆகும். 

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. மற்ற சிலுவை காய்கறிகளுடன் ஒப்பிடுகையில் இதில் அதிக நார்ச்சத்துகள் உள்ளன. 

உருளைக்கிழங்கு

சர்க்கரை வள்ளி கிழங்கு, சிவப்பு உருளைக்கிழங்கு, ஊதா உருளைக்கிழங்கு மற்றும் சாதாரண பழைய வெள்ளை உருளைக்கிழங்கு கூட நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரங்கள்.

பருப்பு மற்றும் பீன்ஸ்

பருப்பி மற்றும் பீன்ஸ் வகைகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாக திகழ்கிறது. மேலும் இவை புரதத்தின் சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. 

இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாக திகழ்கிறது. இருப்பினும் அளவு கட்டுப்பாடு அவசியம். மேலும் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் இருந்து ஆலோசனை பெறவும். 

Image Source: Freepik

Read Next

Green Grapes: பச்சை திராட்சையை எப்போது சாப்பிடலாம்? என்ன நன்மைகள்?

Disclaimer

குறிச்சொற்கள்