Doctor Verified

High Protein In Diabetes: அதிக புரத உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வளவு ஆபத்தா? எப்படினு தெரிஞ்சிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
High Protein In Diabetes: அதிக புரத உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வளவு ஆபத்தா? எப்படினு தெரிஞ்சிக்கோங்க

ஆனால், மக்கள் மருத்துவரிடன் ஆலோசனை ஏதுமின்றி தாங்களாகவே அதிக புரதத்தை உட்கொள்கின்றனர். இது உடலில் பாதமான விளைவை ஏற்படுத்தலாம். தசைகளை வலுப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பினும் அதிக புரதத்தை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கலாம். நீரிழிவு நோயாளிகள் அதிக புரதம் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து அச்சல்டா சமூக சுகாதார மையத்தின் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் கவுரவ் குமாரி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Pista For Diabetes: சர்க்கரை நோய்க்கு உதவும் பிஸ்தா பருப்பு, எப்படி தெரியுமா?

நீரிழிவு நோயாளிகள் அதிக புரத உட்கொள்ளலால் ஏற்படும் தீமைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு புரோட்டீன் உட்கொள்ளல் அவசியமாகும். எனினும், நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் சேதமடையத் தொடங்கினால், இந்த சூழ்நிலையில் அதிக புரதத்தை உட்கொள்வது தீங்கு விளைவிக்கலாம். உடலில் நீரிழிவு பிரச்சனை அதிகமாகும் போது, சிறுநீரகங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். இது நீரிழிவு நெஃப்ரோபதி எனவும் அழைக்கப்படுகிறது.

சிறுநீரக செயலிழப்பு காரணமாக, புரதங்கள் வடிகட்டுவது கடினமாக்கப்பட்டு இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கத் தொடங்கலாம். நீரிழிவு நோயாளிகளின் உடலில் அதிகப்படியான புரதம் இருப்பதால் என்ன நடக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.

  • நீரிழிவு நோயினால் அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். இந்த சூழ்நிலையில், அதிக புரதம் உட்கொள்ளல் செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.
  • அதிக புரத உணவை உட்கொள்வதால், உடலில் சர்க்கரை அளவு அதிகமாகலாம். இந்த சூழ்நிலையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.
  • உடலில் அதிக புரதம் இருப்பது, உடல் எடையை அதிகரிக்கலாம். இது மற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
  • நீரிழிவு நோயில் அதிக புரதம் எடுத்துக் கொள்வது உடலில் இன்சுலின் அதிகரிக்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கடினமாக இருக்கலாம்.
  • நீரிழிவு நோயில் தினசரி அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
  • அதிக புரதத்தை உட்கொள்வதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உணவு மாற்றங்களைச் செய்வது நல்லது. இந்த பக்கவிளைவுகளைத் தவிர்க்க, சர்க்கரை நோயாளிகள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னர் புரத உட்கொள்ளை அதிகரிக்கவும் குறைக்கவும் வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Headache Oils: நீரிழிவு நோய் தலைவலிக்கு எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம்?

Image Source: Freepik

Read Next

Ayurveda for Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் 3 ஆயுர்வேத மூலிகைகள்!

Disclaimer