
Excessive saliva in mouth causes: வாயில் உமிழ்நீர் சுரப்பது பொதுவான விஷயமாகும். ஆனால், சிலருக்கு வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரக்கும் பிரச்சனையைச் சந்திக்கலாம். இது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆம். உண்மையில், வாயில் உமிழ்நீர் சுரப்பதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளது. அவை நமக்குத் தெரியாது. இதில் வாயில் உமிழ்நீர் சுரப்பதற்கான காரணங்கள் குறித்தும், அதைத் தவிர்க்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இது குறித்த சிறந்த தகவல்களுக்கு, லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸின் எம்.டி மருத்துவர் டாக்டர் சீமா யாதவ் அவர்கள் பகிர்ந்துள்ள சில தகவல்களைக் கூறியுள்ளார்.
பொதுவாக, உமிழ்நீர் என்பது வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஒரு திரவமாகும். இது உணவை மென்மையாக்கி, நாம் எளிதாக விழுங்குவதற்கு உதவுகிறது. மேலும், உமிழ்நீரில் உணவை எளிதாக செரிமானம் அடையக்கூடிய நொதிகள் உள்ளது. வாயில் உள்ள கிருமிகளை அழிக்கவும் உமிழ்நீர் உதவுகிறது. இது வறட்சி பிரச்சனையைத் தடுப்பதிலும் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் நாம் ஏதாவது சாப்பிடும்போது உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. ஆனால், அதிக உமிழ்நீர் சுரந்தால் பேசும் போதும், சாப்பிடும் போதும் சிரமம் ஏற்படலாம். இது தவிர, அதிகப்படியான உமிழ்நீர் உற்பத்தியானது தோல் தொற்றுக்கு வழிவகுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Side Effects of Mouth Breathing: வாய் வழியாக சுவாசித்தால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் பற்றி தெரியுமா?
வாயில் அதிகப்படியான உமிழ்நீர் உற்பத்தியாவதற்கான காரணங்கள்
- வாயைச் சுற்றியுள்ள தோலில் தொற்று இருப்பின், அதிகப்படியான உமிழ்நீர் சுரக்கும் பிரச்சனையையும் சந்திக்க நேரிடலாம்.
- உதடுகள் வெடித்திருப்பின், வாயில் அதிகப்படியான உமிழ்நீர் உருவாகும் பிரச்சனை ஏற்படலாம்.
- நிமோனியா காய்ச்சல் இருந்தால், வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது
- சைனஸ் தொற்று காரணமாக, வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரக்கும் பிரச்சனை ஏற்படலாம்.
- தவறான பேச்சு முறை காரணமாக, வாயில் அதிகப்படியான உமிழ்நீர் உருவாகத் தொடங்கலாம்.
வாயில் அதிகப்படியான உமிழ்நீரை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள்
வாயில் அதிகளவு உமிழ்நீர் சுரந்தால் சில வீட்டு வைத்தியங்களைக் கையாள வேண்டும். அதில் சிலவற்றைக் காணலாம்.
தண்ணீர் குடிப்பது
வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு ஏற்பட்டால், தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உமிழ்நீர் உற்பத்தியைக் குறைக்கிறது. எனவே வாயில் அதிக உமிழ்நீர் சுரக்காமல் இருக்க, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் பொடியை உட்கொள்வது
அதிகப்படியான உமிழ்நீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், நெல்லிக்காய் பொடியை உட்கொள்ளலாம். அதாவது நெல்லிக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதன் மூலம் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு நிறுத்தப்படுகிறது. இது தவிர, அதிகப்படியான உமிழ்நீர் உற்பத்தியாகி இருந்தால், ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும் உணவை உட்கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: பல் துலக்க அதிகமா டூத்பேஸ்ட் யூஸ் பண்றவங்களா நீங்க? எவ்வளவு போடணும்னு தெரிஞ்சிக்கோங்க..
துளசி இலைகளை சாப்பிடுவது
வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு நிகழ்ந்தால், ஒரு துளசி இலையை மென்று, பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த தீர்வை இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம். பிறகு, வாயில் அதிகளவிலான உமிழ்நீர் சுரக்கும் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
சர்க்கரையைத் தவிர்ப்பது
வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரந்தால், சர்க்கரை உட்கொள்ளலின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில், அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது வாயில் அதிகப்படியான உமிழ்நீரை ஏற்படுத்தலாம். எனவே அதிகளவு உமிழ்நீரைத் தவிர்க்க, சர்க்கரையின் அளவைக் குறைப்பது அவசியமாகும்.
இலவங்கப்பட்டை தேநீர்
வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு ஏற்பட்டால், இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது நன்மை பயக்கும். இதற்கு தண்ணீரில் இலவங்கப்பட்டையை கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இவை அதிகப்படியான உமிழ்நீர் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
இந்த வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் வாயிலிருந்து வெளியேறும் அதிகப்படியான உமிழ்நீர் பிரச்சனையைத் தவிர்க்கலாம். எனினும், இந்த நடவடிக்கைகளை எடுத்த பிறகும் உமிழ்நீர் பிரச்சனை சரியாகவில்லை எனில் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கிய உணவை சாப்பிடும் உங்க வாய் ஆரோக்கியமா இருக்கா? வாய் பூஞ்சை அறிகுறி, காரணம்!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version