How to Get Rid of Dark Elbows: நாம் பெரும்பாலும் முக ஆரோக்கியத்திற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்துவோம். நமது முகத்தின் அழகையும், நிறத்தையும் பராமரிக்க நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். ஆனால், நம்மில் பலருக்கு முழங்கால் மற்றும் முழங்கைகள் கருப்பாக இருக்கும். அதை பற்றிய கவலை இருந்தாலும் பெரும்பாலும் அதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
இந்த கருமையால், கட் ஸ்லீவ்ஸ் மற்றும் குட்டையான ஆடைகளை அணிவதை நாம் தவிர்ப்போம். உங்கள் முழங்கைகளில் உள்ள கருமையை நீக்க கிரீம் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், வீட்டில் உள்ள பிரெஷ் கிரீம் முழங்கால் மற்றும் கை கருமையை நீக்குவதற்கு உதவியாக இருக்கும். கிரீமை எப்படி பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Black Neck Remedies: கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சிம்பிள் டிப்ஸ்!
முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமை நீக்க கிரீம் பயன்படுத்துவது எப்படி?

கிரீம் மற்றும் மஞ்சள்
உங்களின் முழங்கால் மற்றும் முழங்கைகள் கருமையாக இருந்தால், க்ரீம் மற்றும் மஞ்சள் தூள் தடவலாம். இதற்காக நீங்கள் முதலில், 3-4 ஸ்பூன் கிரீம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை கருமை உள்ள இடத்தில் தடவவும்.
பின்னர், இதை 3 நிமிடம் மசாஜ் செய்து, 15-10 நிமிடங்களுக்குப் அப்படியே விடவும்.
இதையடுத்து, குளிர்ந்த நீரால் முழங்கால் மற்றும் முழங்கைகளை சுத்தம் செய்யவும். கிரீம் மற்றும் மஞ்சள் கலவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. வாரம் 3 முறை இதை பயன்படுத்தலாம்.
கிரீம் மற்றும் தேன்

கருப்பான முழங்கை மற்றும் முழங்கால் இருந்தால், கிரீம் மற்றும் தேன் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதற்காக நீங்கள் 2-3 ஸ்பூன் கிரீம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் தடவவும். இந்த பேஸ்ட்டை தினமும் பயன்படுத்தி வர கருமை படிப்படியாக மறையும். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்
கிரீம் மற்றும் கடலை மாவு

க்ரீம் மற்றும் கடலை மாவு பேஸ்ட் கருமையான முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் இருந்து விடுபட உதவும். பழங்காலத்திலிருந்தே அழகை அதிகரிக்க கடலை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, 2-3 ஸ்பூன் கடலை மாவில் 2 ஸ்பூன் கிரீம் மற்றும் அலோ வேரா ஜெல் கலக்கவும்.
இப்போது இந்த பேஸ்ட்டை முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் தடவவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் தோலை சுத்தம் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் தெரியும். கடலைமாவு, கற்றாழை மற்றும் கிரீம் ஆகியவற்றின் கலவையானது சருமத்திற்கு மிகவும் நல்லது.
கிரீம் மற்றும் உருளைக்கிழங்கு சாறு

நீங்கள் விரும்பினால், முழங்கால்கள் மற்றும் முழங்கைகளின் கருமையைப் போக்க கிரீம் மற்றும் உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்தலாம். இதற்கு உருளைக்கிழங்கை துருவி பிறகு சாறு எடுக்கவும். இப்போது அதில் 2-3 ஸ்பூன் க்ரீமில் இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றை கலக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?
முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் இந்த கலவையை தடவவும். அரை மணி நேரம் கழித்து, தோலை தண்ணீரில் நன்கு கழுவவும். நல்ல பலன்களுக்கு இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு இயற்கையாக சருமத்தை ப்ளீச்சிங் செய்யும்.
Pic Courtesy: Freepik