Temple Style Pongal In Tamil: என்னதான் நாம் வீட்டில் வித விதமாக சமைத்து சாப்பிட்டாலும் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் புளியோதரை மற்றும் பொங்கலுக்கு நாம் அனைவரும் அடிமை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அதுமட்டும் அல்ல, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா, தீபாவளி என பண்டிகை தினங்கள் வரிசையாக வருகிறது.
பண்டிகை தினங்களுக்கு வீட்டிலேயே கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் செய்து அசத்தலாமா? இதோ உங்களுக்கான ரெசிபியை நாங்கள் கொடுக்கிறோம். வாருங்கள், கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : மீண்டும் கேட்கத் தூண்டும் தேங்காய் பால் புலாவ் ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் - 2 1/2 லிட்டர்
பாசி பருப்பு - 1/2 கப்
பொடித்த வெல்லம் - 500 கிராம்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
நெய் - 1/2 கப்
கொப்பரை தேங்காய் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
கிராம்பு - 4
நெய் - 4 மேசைக்கரண்டி
கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் செய்முறை:

- ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை சேர்த்து ஊறவைக்கவும். அடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பாசி பருப்பை சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
- பின்பு ஊறவைத்த பச்சரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட்டு நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, கொப்பரை தேங்காய், ஏலக்காய் தூள், கிராம்பு சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்.
- மற்றோரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.
இந்த பதிவும் உதவலாம் : ஒரு கப் சாதம் 2 கப் பால் இருந்தால் போதும்… செஃப் தாமு ஸ்டைல் தயிர் சாதம் தயார்!
- வெல்லம் கரைந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரை தேங்காயை சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்.
- பின்பு வேகவைத்த அரிசியில் வெல்லம், முந்திரி, திராட்சை, தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.
- கடைசியாக நெய் சேர்த்து கலந்து இறக்கினால் அருமையான கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் தயார்!
சர்க்கரை பொங்கல் ஆரோக்கிய நன்மைகள்:

புரதம்: பருப்பில் உள்ள புரதம் தசையை உருவாக்க உதவுகிறது.
ஆற்றல்: அரிசி மற்றும் வெல்லத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் நீடித்த ஆற்றலை வழங்குகின்றன.
நார்ச்சத்து: உணவில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: மஞ்சள், கருப்பு மிளகு மற்றும் கறிவேப்பிலை போன்ற மசாலாப் பொருட்கள் சுவையைச் சேர்க்கின்றன மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
இந்த பதிவும் உதவலாம் : Pineapple Biryani: சுவையான பைனாப்பிள் தம் பிரியாணி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
ஆரோக்கியமான கொழுப்புகள்: தென்னிந்திய உணவுகளில் பிரதானமான நெய், ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது.
சத்துக்கள்: வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் பி2 உள்ளது. பேரிச்சம்பழத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் பல உள்ளன. பழுப்பு அரிசியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், தியாமின், நியாசின் மற்றும் வைட்டமின் பி6 உள்ளன.
Pic Courtesy: Freepik