Pongal 2025: ஆரோக்கியமான முறையில் சர்க்கரை பொங்கல் செய்யலாமா.?

Healthy Sweet Pongal Recipe: இந்த பொங்கல் திருவிழாவில், ஆரோக்கியமான முறையில் சர்க்கரை பொங்கல் செய்து, உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். ஆரோக்கியமான முறையில் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். 
  • SHARE
  • FOLLOW
Pongal 2025: ஆரோக்கியமான முறையில் சர்க்கரை பொங்கல் செய்யலாமா.?

pongal festival 2025: தமிழர் திருநாளான தை பொங்கல், ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் வென்பொங்கல், சர்க்கரை பொங்கல், 21 வகை காய்கறிகள் சேர்த்த கூட்டு செய்து, சூரிய பகவானுக்கு படைப்பார்கள். பொங்கல் திருவிழாவை அறுவடைத் திருவிழா என்று அழைப்பர்.

இந்த பொங்கல் திருவிழாவில், ஆரோக்கியமான முறையில் சர்க்கரை பொங்கல் செய்து, உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். ஆரோக்கியமான முறையில் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

artical  - 2025-01-10T090721.135

சர்க்கரை பொங்கல் ரெசிபி (chakkara pongal recipe)

தேவையான பொருட்கள்

* 1/2 கப் பச்சை அரிசி

* 2 டேபிள் ஸ்பூன் பாசி பருப்பு

* 1 கப் வெல்லம்

* 2 1/2 கப் தண்ணீர்

* 3 தேக்கரண்டி நெய்

* 1 சிட்டிகை உப்பு

* 6 முந்திரி

* 1 கைப்பிடி உலர் திராட்சை

* 1 ஏலக்காய்

* 1 கிராம்பு

* 1 சிட்டிகை ஜாதிக்காய் தூள்

* 1 பச்சை கற்பூரம்

artical  - 2025-01-10T090756.769

செய்முறை

* பிரஷர் குக்கரில் அரிசி, பாசி பருப்பு, உப்பு சேர்க்கவும். 4 விசில் வரை பிரஷர் குக் செய்யவும். விசில் அடங்கியவுடன், குக்கரை திறந்து, நன்கு மசியும் வரை கலக்கவும். கெட்டியாக இருந்தால், 1 கப் வெந்நீரைச் சேர்த்து தளர்வாக மாற்றவும்.

* தற்போது, ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் வெல்லம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லத்தை முழுவதுமாக கரைத்து வடிகட்டி குக்கரில் மசித்த அரிசியுடன் சேர்க்கவும்.

* ஒரு தனி கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இதனை தனியாக எடுத்து வைக்கவும்.

* அதே கடாயில் கிராம்பு, ஏலச்சி சேர்த்து அடுப்பை அணைக்கவும். இப்போது, பச்சை கற்பூரம், ஜாதிக்காய் தூள் சேர்த்து, விரைவாக கிளறவும்.

artical  - 2025-01-10T090938.049

* தற்போது அரிசி பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கலந்த மசியலை, மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும்.

* தனிதனியே வறுத்த பொருடளை இதில் சேர்த்து, ஏலக்காயை தட்டி சேர்த்து, நன்கு கலக்கவும்.

* சமைக்கும் போது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

* அவ்வளவு தான் அருமையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை பொங்கள் ரெடி.

இதையும் படிங்க: Sakkarai Pongal: சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் செய்யலாமா?

 

Read Next

Papaya Benefits: தினமும் காலை வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் 6 அளப்பரிய நன்மைகள்!

Disclaimer