How To Make Millet Rice Recipe: உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது. அந்த காலத்தில் பெரியவர்கள் உட்கொண்ட உணவுவகைகளே இன்று அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆயுள்காலம் எடுத்துக் கூறுகிறது. ஆனால், நவீன காலத்தில் எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.
இதனைத் தவிர்க்க சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதன் படி தானிய வகைகள் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருளாக விளங்குகிறது. இந்த பாரம்பரிய உணவு நமக்கு ஆரோக்கியத்தை மீட்டெடுக்கக் கூடியதாக அமைகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கம்புவைக் கொண்டு தயார் செய்யப்படும் கம்பு சாதம் ரெசிபி குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உணவில் சணல் விதைகள் சேர்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
நாட்டுக்கம்பு சாதம் தயார் செய்வது எப்படி?
தேவையானவை
- நாட்டுக்கம்பு - அரை கிலோ
- நீர் - 7 சின்ன டம்ளர்

நாட்டுக்கம்பு சாதம் செய்முறை
பொதுவாக நாட்டுக்கம்பு கம்மஞ்சோறு செய்ய ஏற்றதாகும். இதில் நாட்டுக்கம்பு சாதம் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
- முதலில் நாட்டுக்கம்பு அரை கிலோ எடுத்துக் கொண்டு, அதனை மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும்.
- இதில் அதன் மேல்பகுதி தோலை நீக்கும் அளவுக்கு நீக்கவேண்டும்.
- அதன் பிறகு நாட்டுக்கம்பினை, முறம் ஒன்றைப் பயன்படுத்தி ஒரு புடை புடைக்க வேண்டும். பின் அந்தக் கம்பினை நீரில் கலந்து கல், தூசி போன்றவற்றை தேடி அதை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
- இதில் ஈரப்பதம் ஓரளவுக்கு குறைந்த பிறகு, நாட்டுக்கம்பினை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அடுத்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு ரவை பதத்தில் இருக்க வேண்டும். இதை மிகவும் மெலிதாக அரைத்து எடுக்கக் கூடாது.
- முதலில் அரைத்தபின் புடைத்து, பின் இரண்டு தடவை அரைக்கும் போது, கிடைத்த பொடியானது முன்பகுதியில் இருக்கும். அதையே நாம் பயன்படுத்த வேண்டும்.
- பின்பகுதியில் சற்று பெரிதாக இருக்கும் நாட்டுக்கம்பை அப்படியே து மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, ரவை பதத்திற்கு கொண்டு வரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ragi Benefits: நீங்க எப்போதும் இளமையா இருக்கணுமா? அப்ப ராகி எடுத்துக்கோங்க.
- அதன் பிறகு, சட்டியில் நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதில் சிறிது குளிர்ந்த நீரை ஊற்றி, அதன் பின் அரைத்த நாட்டுக்கம்பினைச் சேர்க்க வேண்டும்.
- இவ்வாறு செய்யும் போது கம்மஞ்சோறு கட்டியாகாமல் இருக்கும். அதே சமயம், அரைத்த நாட்டுக்கம்பினை சிறிதுபோட்டு, பிறகு கரண்டியால் நன்கு கிளற வேண்டும். இவ்வாறு அரைத்த நாட்டுக்கம்பினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- நாட்டுக்கம்பினை சேர்த்த பிறகு 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக கிளற வேண்டும்.
- இவ்வாறு செய்த பின், சிறிதுநேரத்தில் கிடைக்கும் கம்பு பதத்தை எடுத்துக் கொண்டு, அதை குக்கர் ஒன்றில் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அதில் நாம் தயாரித்த கம்பு பதத்தை அந்த பாத்திரத்துடன் குக்கரில் வைக்க வேண்டும்.
- பிறகு குக்கரை மூடி 3 முதல் 4 விசில் வரை வரவிட்டு, இறக்கி வைத்துக் கொள்ளலாம்.
- அதன் பின், ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து குக்கரைத் திறக்க வேண்டும்.
- இப்போது சூப்பரான சுவையில் மணக்க மணக்க கம்பு சோறு தயாரானது.
- இதனுடன் உங்களுக்கு விருப்பமான புளிக்குழம்பு, தக்காளி தொக்கு, கருவாட்டுக்குழம்பு போன்றவற்றைச் சேர்த்து சாப்பிடலாம்.

நாட்டுக்கம்பு உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
நாட்டுக்கம்பு உட்கொள்வது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது குறித்து காண்போம்.
- நாட்டுக்கம்பில் உள்ள லிக்னின் என்னும் ஊட்டச்சத்துக்கள், மாரடைப்பினை குறைக்க உதவுகிறது.
- இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், இவை பசி உணர்வைத் தூண்டாமல் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
- மேலும், இந்த நார்ச்சத்துக்கள் டைப் 2 நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் சுரப்பினை சீராக வைக்கவும் வழிவகுக்கிறது.
- மேலும் நாட்டுக்கம்பு நுரையீரலை சீராகப் பாதுகாக்க உதவுவதுடன், ஆஸ்துமா போன்ற நோய்களைத் தவிர்க்கிறது.
- பொதுவாக கம்மங்கூழ் அருந்துவது வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தக் கூடியதாகும்.
- கூடுதலாக, இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண் புரை மற்றும் மாலைக்கண் நோய் போன்ற கண்சார்ந்த பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
Image Source: Freepik