நாவில் எச்சில் ஊறும் சுவையில் அரேபியன் கோதுமை புட்டிங் ரெசிபி!

  • SHARE
  • FOLLOW
நாவில் எச்சில் ஊறும் சுவையில் அரேபியன் கோதுமை புட்டிங் ரெசிபி!


அந்த வகையில் இந்த வாரம் திவ்யா அவர்கள் செய்து அசத்திய ரெசிபியான அரேபியன் கோதுமை புட்டிங் மக்களிடையே பிரபலமாக பேசி வரும் ரெசிபி ஆகும். இது இனிப்பு சுவையுடன் சாப்பிடத் தூண்டும் வண்ணம் அமைகிறது. இந்த அசத்தலான கோதுமை ரெசிபியை வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்யலாம். இதில் அரேபியன் கோதுமை புட்டிங் ரெசிபி தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Paneer Roll: வெறும் 10 நிமிடம் போதும்… குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் ரோல் தயார்!!

அரேபியன் கோதுமை புட்டிங் ரெசிபி

பொதுவாக இந்த ரெசிபியான பிரட் வைத்து தயார் செய்யப்படுகிறது. இதில் கோதுமையை வைத்து தயார் செய்யப்படும் அரேபியன் கோதுமை புட்டிங் ரெசிபி தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.

அரேபியன் கோதுமை புட்டிங் தயார் செய்யும் முறை

தேவையானவை

  • தயிர் - 1/4 கப்
  • நெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • கோதுமை மாவு - 1 கப்
  • உப்பு - 2 பின்ச்
  • பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
  • பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு

கஸ்டர்டு லேயர் தயார் செய்ய தேவையானவை

  • கஸ்டர்டு பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • பால் - 1/4 கப்
  • பால் - 1/4 லிட்டர் (சூடானது)
  • சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
  • வறுத்த தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

ஸ்ட்ராபெர்ரி லேயர் தயார் செய்ய தேவையானவை

  • ஸ்ட்ராபெர்ரி - 4
  • சுண்ட காய்ச்சிய பால் - 1/4 கப்
  • ஃப்ரஸ் க்ரீம் - 1/4 கப்
  • மில்க் மெய்டு - 1/4 கப்

செய்முறை

  • முதலில் கோதுமை புட்டிங் தயார் செய்ய, கிண்ணம் ஒன்றில் தயிர், நெய், கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, பால் பவுடர், ஏலக்காய் தூள் போன்றவற்றை மேலே கொடுக்கப்பட்ட அளவில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். (இவை அனைத்தையும் சலித்து சேர்க்க வேண்டும்)
  • இதில் முதலில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அவசியமெனில், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளலாம்.
  • கெட்டியாக பிணைந்து, அதில் கோதுமை மாவு சிறிது தூவி விட்டு சப்பாத்தி தேய்ப்பது போல தேய்க்க வேண்டும். (மெலிதாக இல்லாமல் அடர்த்தியாக இருப்பது போன்றே தேய்க்கலாம்).
  • இவ்வாறு தேய்த்த மாவிலிருந்து நமக்கு பிடித்த வடிவத்தில் சிறிது சிறிது கட் பண்ணி தனியாக வைத்துக் கொள்ளலாம்.
  • பிறகு வாணலி ஒன்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, அதில் இந்த மாவைச் சேர்த்து வறுக்கலாம்.
  • மிகவும் மிதமான சூட்டில் அடுப்பை குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
  • இது பொன்னிறமாக வரும் வரை வைத்து வதக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Chilli Bread Recipe: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சூப்பர் ஸ்னாக்ஸ் ரெசிபி செய்யலாமா?

கஸ்டர்டு லேயர் செய்முறை

  • கஸ்டர்டு லேயர் தயார் செய்ய, கஸ்டர்டு பவுடர் ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவு எடுத்தி, அதில் கால் கப் அளவிலான பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கட்டி எதுவும் இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.
  • பின், கால் லிட்டர் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தயார் செய்த கஸ்டர்டு கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்க வேண்டும். இதுவும் கட்டி எதுவும் இல்லாமல் நன்கு வதக்க வேண்டும்.
  • இது நன்கு கொதித்த பிறகு சர்க்கரை சேர்த்து பின் வறுத்த தேங்காய் (Dessicated Coconut) போன்றவற்றைச் சேர்க்கலாம்.
  • இந்தக் கலவையை நன்கு கலந்து இரண்டு நிமிடம் மட்டும் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடலாம்.

ஸ்ட்ராபெர்ரி லேயர் செய்முறை

  • முதலில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் நான்கு எடுத்துக் கொண்டு, நன்கு அரைக்க வேண்டும்.
  • கிண்ணம் ஒன்றில் சுண்ட காய்ச்சி வைத்த பால், ஃப்ரஸ் கிரீம், மற்றும் மில்க் மெய்டு போன்றவற்றைச் சேர்க்கலாம்.
  • இதனுடன் அரைத்து வைத்த ஸ்ட்ராபெர்ரி கரைசலையும் சேர்க்கலாம்.
  • இப்போது ஸ்ட்ராபெர்ரி லேயர் தயாரானது.

அரேபியன் கோதுமை புட்டிங் ரெசிபி

ஒரு பிளேட் ஒன்றில் முதலில் கஸ்டர்டு லேயரை ஊற்றி, எண்ணெயில் வதக்கிய மாவு கலவையைச் சேர்த்து பின் அதில் ஸ்ட்ராபெர்ரி லேயர் சேர்த்து பரிமாறலாம்.

இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், சுவையைக் கூட்டுவதாகவும் அமைகிறது. இந்த சுவையான அரேபியன் கோதுமை புட்டிங் ரெசிபியை நீங்களும் இந்த எளிமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி தயார் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vazhakkai Kola Urundai: கலக்கலான சுவையில் வாழைக்காய் கோலா உருண்ட ரெசிபி! எப்படி செய்வது?

Image Source: Freepik

Read Next

National Mango Day: பழங்களின் ராஜாவுக்கும் நாள் உண்டு.. மாம்பழத்தின் முக்கிய அம்சங்கள் இங்கே..

Disclaimer

குறிச்சொற்கள்