மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் தேங்காய் வேர்க்கடலை சட்னி! இப்படி செஞ்சி பாருங்க

  • SHARE
  • FOLLOW
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் தேங்காய் வேர்க்கடலை சட்னி! இப்படி செஞ்சி பாருங்க


இது போன்ற நிலைகளைத் தவிர்க்க, உணவு சுவைமிக்கதாக இருப்பினும், ஆரோக்கியமிக்கதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துகள் மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். ஏனெனில், போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமையால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப்பாதுகாக்கும் வகையிலும், சுவை மிக்கதாகவும் இருக்க சாப்பிட வேண்டிய வேர்க்கடலை தேங்காய் சட்னி தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Peanuts Benefits: குளிர்காலத்தில் வேர்கடலை எவ்வளவு நல்லது தெரியுமா?

தேங்காய் வேர்க்கடலை சட்னி தயாரிக்கும் முறை

தேங்காய் வேர்க்கடலை சட்னி தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறை குறித்துக் காணலாம்.

தேவையான பொருள்கள்

  • வேர்க்கடலை - 1 கப்
  • எண்ணெய் - 5 ஸ்பூன்
  • புளி – சிறிதளவு
  • பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு பல் – 4
  • பச்சை மிளகாய் – 10
  • உளுந்து - ஒரு ஸ்பூன்
  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • பெருங்காய தூள் – கால் ஸ்பூன்
  • தேங்காய் – ஒரு கப் (துருவியது)
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • வரமிளகாய் – 1

தேங்காய் வேர்க்கடலை சட்னி தயார் செய்வது எப்படி

  • முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பின் வேர்க்கடலையை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு வேர்க்கடலையை வறுத்த பிறகு அதிலே பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம். அதன் பின் பூண்டு, புளி என ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த வறுத்த பொருள்களை ஆற வைத்துக் கொள்ளலாம். பின் மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, கல்லுப்பு போன்றவற்றைச் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்தக் கலவையைப் பாதி அரைத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றில் எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்துக் கொண்டு தாளிக்க வேண்டும்.
  • இந்த தாளித்த கலவையைச் சட்னியில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இப்போது சூப்பரான மற்றும் சுவையான தேங்காய் வேர்க்கடலை சட்னி தயார் செய்யப்பட்டது. இதை சூடான தோசை அல்லது இட்லியுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையைக் கூட்டுகிறது.
  • இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணுவர்.

இந்த பதிவும் உதவலாம்: Peanuts Benefits: நீரிழிவு முதல் மூளை செயல்பாடு வரை.. வேர்க்கடலை தரும் அற்புத நன்மைகள்!

வேர்க்கடலையின் ஊட்டச்சத்துக்கள்

வேர்க்கடலையானது மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் வளமான மூலமாகக் கருதப்படுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக அமைகிறது. இவற்றில் குறைந்தளவு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பினும், தாவர புரதங்கள் நிறைந்திருப்பதால் வேர்க்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. மேலும், வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ, பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது.

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பின்வரும் நன்மைகளைத் தருகிறது.

  • வேர்க்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இவை ஆரோக்கியமான பிஎம்ஐ குறியீட்டைப் பராமரிக்க உதவுகிறது. இவை பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • வேர்க்கடலையில் உள்ள தாவர புரதங்கள் மெலிந்த தசையை உறுதியான தசையாக உருவாக்க உதவுகிறது. இவை தசை வளர்ச்சிக்கும், தசை பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.
  • உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துக்களை வேர்க்கடலை கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பைத் தருகிறது.
  • வேர்க்கடலை உட்கொள்வது குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் மற்றும் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவை சிறப்பாக ஒழுங்குபடுத்த உதவுகிறது. இவை இரத்த நாளங்களைத் தெளிவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், அடைப்புகள் மற்றும் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.
  • வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற பயோஆக்டிவ் சேர்மங்கள் முதுமை எதிர்ப்பு செல்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இவை வயதான அறிகுறிகளைக் காட்டாமல் தடுக்க உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வகையான நன்மைகளைத் தரும் வேர்க்கடலையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Peanuts: ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

Image Source: Freepik

Read Next

Guava Juice Benefits: கொய்யா ஜூஸ்.. கொட்டிகிடக்கும் நன்மைகள் இதோ..

Disclaimer