Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய எந்த உலர் பழங்கள் சாப்பிடலாம்?

  • SHARE
  • FOLLOW
Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய எந்த உலர் பழங்கள் சாப்பிடலாம்?

ஏன் வைட்டமின் டி முக்கியம்?

உடலில் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க வைட்டமின் டி மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது உடலிலிருந்து கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் வைட்டமின் டி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே இவை நோய்த்தொற்றுக்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. இது தவிர, தசை செயல்பாட்டை ஆதரிக்க வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு கிராம்பு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய உதவும் உலர் பழங்கள்

உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டைச் சரி செய்ய, சில ஆரோக்கியமான உலர் பழங்களை உட்கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் டி குறைபாட்டிற்கு உதவும் உலர் பழங்களைக் காணலாம்.

உலர் ஆப்ரிகாட்ஸ்

உலர்ந்த பாதாமி பழங்கள் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இது சிறிய அளவில் இருந்தாலும், இந்த பழத்தில் வைட்டமின் ஏ, ஈ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே நல்ல பார்வை, நோயெதிர்ப்புச் செயல்பாடு மற்றும் செரிமான ஆரோக்கியம் போன்றவற்றை அதிகரிப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க உலர் ஆப்ரிகாட்ஸ் உதவுகின்றன.

உலர் திராட்சை

உலர் திராட்சையானது ஒரு இயற்கையான இனிப்பு மட்டுமல்ல. இது வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். தினமும் ஓரிரவு முழுவதும் உலர் திராட்சையை ஊறவைத்து உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஓட்மீல், தயிர் அல்லது சாலட்களில் உலர் திராட்சையை உட்கொள்ளலாம்.

பிஸ்தா

பிஸ்தா வைட்டமின் டி நிறைந்த சில உலர் பழமாகும். இது கொலஸ்ட்ரால் இல்லாததாகவும், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. பிஸ்தா ஆனது அதிக அளவு நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகும். இது இரத்த அழுத்தம். இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Curd and Onion: தயிர் மற்றும் வெங்காயத்தை ஒன்றாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

உலர் பிளம்ஸ்

உலர் பிளம்ஸ் ஆனது சிறிய அளவு வைட்டமின் டி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாகும். இதில் வைட்டமின் கே, பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு அடர்த்தியை ஆதரிக்கிறது. மேலும் இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

பாதாம்

இது பிரபலமான உலர் பழங்களில் ஒன்றாகும். இதில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலானோர் பாதாமை ஊறவைத்து உரிக்காமல் சாப்பிட விரும்புகின்றனர். ஆனால், இதை தோலுடன் உட்கொள்வது அதிக சத்தானவையாகக் கருதப்படுகிறது. பாதாமில் அதிக நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது பசி வேதனையைக் குறைக்க உதவுகிறது. பாதாம் ஒரு சரியான நிரப்பு சிற்றுண்டியாக அமைகிறது.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி ஒரு சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது. இவை வைட்டமின் டி நிறைந்த உலர்ந்த பழங்கள் மற்றும் சிறிய. வட்ட வடிவம் மற்றும் கூர்மையான கசப்பு மற்றும் புளிப்பு சுவை போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறது. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அன்றாட உணவில் கிரான்பெர்ரிகளைச் சேர்ப்பது வைட்டமின் டி குறைபாட்டைச் சரி செய்கிறது. ஆனால், கிரான்பெர்ரிகளை அதிகம் சாப்பிடுவது வயிறு தொந்தரவை ஏற்படுத்தலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சரி செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Thuthuvalai Health Benefits: ஒன்றா, இரண்டா? ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் தூதுவளை!

Image Source: Freepik

Read Next

நீங்க தினமும் சிக்கன் சாப்பிடுவீங்களா? இது எவ்வளவு ஆபத்து தெரியுமா?

Disclaimer