Should You Eat Onion And Curd Together: இந்திய உணவு வகைகளில் காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவை சுவையாக இருப்பதுடன் பல்வேறு ஊட்டச்சத்து மிகுந்தவையாகும். ஆனால் இது போன்ற காய்கறிகள், மசாலா பொருள்கள், மூலிகைகள் போன்றவற்றில் இரண்டு பொருள்களை ஒன்றிணைந்து உட்கொள்வது குறித்து யோசித்ததுண்டா? அதன் படி, இதுபோன்ற இரண்டு பொதுவான சமையலறை பொருட்களில் பொதுவாக தயிர் மற்றும் வெங்காயம் அமைகிறது.
இவை இரண்டுமே அதன் ஊட்டச்சத்துக்கள், சுவை மற்றும் அமைப்புக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் தயிர் மற்றும் வெங்காயம் கலவை உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆம், ரைதா என்ற பெயரில் நாம் பல சமயங்களில் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உட்கொள்கிறோம். ஆனால், இந்த உணவுப்பொருள்கள் இரண்டின் கலவை உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. இதில் தயிர் மற்றும் வெங்காயம் கலவையால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Thuthuvalai Health Benefits: ஒன்றா, இரண்டா? ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் தூதுவளை!
தயிருடன் வெங்காயத்தை ஏன் சேர்க்கக் கூடாது?
செரிமான பிரச்சனைகள்
தயிர் மற்றும் வெங்காயம் கலவையானது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இவை இரண்டினையும் ஒன்றாக உட்கொள்வது செரிமான பிரச்சனையைத் தூண்டுகிறது. இதற்கு காரணம், தயிர் நொதித்தல் செயல்முறையின் உதவியுடன் தயார் செய்யப்படுகிறது. இதில் உள்ள புரோபயாடிக்குகள், லாக்டோஸ் மற்றும் உணவில் உள்ள பிற கூறுகளை உடைக்க உதவுகிறது.
மேலும், வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் சல்பர் நொதித்தல் செயல்முறையில் தலையிட்டு, செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். வெங்காயத்தில் வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கும் சில கலவைகள் உள்ளது. இதை சிறிது அமிலத்தன்மை கொண்ட தயிருடன் இணைக்கும் போது, அது சிலருக்கு வீக்கம், வாயு மற்றும் அஜீரணத்தின் அறிகுறிகளைத் தூண்டலாம்.
சுவை பாதிப்பு
வெங்காயத்தை தயிருடன் இணைப்பதால் அது உணவின் சுவை மற்றும் அமைப்பை பாதிக்கும் நிலை ஏற்படலாம். ஏனெனில், வெங்காயம் வலுவான, காரமான சுவையைக் கொண்டிருக்கும். இதனால், இது தயிரின் லேசான கிரீமி சுவைக்கு சரியாகாது. இது உணவு வகைகளின் சுவையைக் கெடுக்கும் வகையில் அமையலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடலுக்குக் குளிர்ச்சி மட்டுமல்ல! இந்த நன்மைகளையும் அள்ளித் தரும் வெள்ளரிக்காய் பச்சடி
அமைப்பு காரணமாக
வெங்காயம் மற்றும் தயிர் இரண்டின் அமைப்பும் சிக்கல்கள் வாய்ந்ததாகும். அதிலும் குறிப்பாக, வெங்காயம் பச்சையாக இருக்கும் போது மிருதுவான அமைப்பைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இது தயிரின் கிரீமி மற்றும் மென்மையான நிலைத்தன்மையுடன் நன்கு கலக்காது.
ஊட்டச்சத்து உறிஞ்சுதல் காரணமாக
தயிர் மற்றும் வெங்காயம் சேர்த்து உட்கொள்வது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கலாம். இதனால், செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது தவிர, வெங்காயத்தில் சல்பர் கலவைகள் இருப்பதால், இவை தயிரில் உள்ள கால்சியம் போன்ற சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனினும், இதற்கான ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
மிதமான கலவை
இந்த கலவையை உட்கொண்ட பிறகு, எந்தவொரு பாதகமான விளைவுகளையும் அனுபவிக்காதவர்கள் வெங்காயம் மற்றும் தயிரை மிதமான அளவில் உட்கொள்வது குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை ஏற்படுத்தாது.
வெங்காயம், தயிர் இரண்டையும் தனித்தனியாக உட்கொள்ளும் போது கணிசமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும், வெங்காயத்தில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது. எனினும், இந்த இரண்டு உணவுகளை சேர்த்து உண்பது சில நபர்களுக்கு செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள், இந்த இரண்டின் கலவையைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! வீடே மணக்கும் சுவையில் பால் கொழுக்கட்டையை இப்படி செஞ்சி பாருங்க
Image Source: Freepik