விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! வீடே மணக்கும் சுவையில் பால் கொழுக்கட்டையை இப்படி செஞ்சி பாருங்க

  • SHARE
  • FOLLOW
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! வீடே மணக்கும் சுவையில் பால் கொழுக்கட்டையை இப்படி செஞ்சி பாருங்க

இது பாரம்பரிய செட்டி நாட்டு உணவு வகைகளில் தோன்றியதாகும். ஒவ்வொரு வீட்டிலும் விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாமல், மற்ற பண்டிகைகளிலும் சிற்றுண்டியாக ஒவ்வொரு பலகார வகைகள் செய்து தருவது வழக்கமாகும். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியில் பால் பணியாரம் மற்றும் பால் கொழுக்கட்டை போன்றவற்றைச் செய்து அசத்துவர். இதில் எளிதாக, சுவையான முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் பால் கொளுக்கட்டை ரெசிபி தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Moong Dal Masala Puri: குழந்தைகளுக்கு பிடித்த பாசிப்பருப்பு மசாலா பூரி செய்முறை!

பால் கொழுக்கட்டை தயார் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

  • 2 கப் தேங்காய் பால்
  • 1 கப் பசும் பால்
  • 1 கப் இடியாப்ப மாவு
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 1 சிட்டிகை உப்பு
  • சர்க்கரை தேவையான அளவு

பால் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை

  • முதலில் ஒரு கப் அளவிலான இடியாப்ப மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, கால் கப் அளவிலான துருவிய தேங்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு இந்த மாவில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது, ஒரு பாத்திரத்தை மிதமான வெப்பத்தில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
  • தண்ணீர் கொதித்த பிறகு, சிறிது சிறிதாக ஒரு டேபிள்ஸ்பூன் மூலம் இந்த மாவில் சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து சிறிது நேரம் ஆற விட வேண்டும்.
  • மாவு சிறிது ஆறிய பிறகு, அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, அதில் 2 கப் அளவு தேங்காய் பால், அரை கப் அளவு பசும் பால், மற்றும் எடுத்து வைத்திருக்கும் மீதமுள்ள இடியாப்ப மாவையும் போட்டு நன்கு கலக்கி கொதிக்க வைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: உடலுக்குக் குளிர்ச்சி மட்டுமல்ல! இந்த நன்மைகளையும் அள்ளித் தரும் வெள்ளரிக்காய் பச்சடி

  • பால் கொதித்த பிறகு, அதில் உருட்டி வைத்த கொழுக்கட்டை உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டி மூலம் இந்த பாலில் சேர்க்கலாம். இவ்வாறு சேர்த்து 15 முதல் 20 நிமிடம் வரை அப்படியே வேக விட வேண்டும்.
  • அதன் பிறகு, அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை பொறுமையாக கிளர வேண்டும்.
  • இவ்வாறு சர்க்கரை கரைந்த பிறகு அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
  • இப்போது சூப்பரான, சூடான மற்றும் சுவையான பால் கொழுக்கட்டை தயாரானது.

தேங்காய் பால் நன்மைகள்

இந்த சூப்பரான பால் கொழுக்கட்டை உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு பொருள்கள் கலந்து தயார் செய்யப்பட்டதாகும். குறிப்பாக இதில் உள்ள தேங்காய் பால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின்கள் சி, ஈ, பி1, பி3, பி5 மற்றும் பி6, இரும்பு, செலினியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தேங்காய் பாலில் நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதன் நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர எடையிழப்பு, இதய நோய் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் மணக்க மணக்க கொளுக்கட்டை ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க

Image Source: Freepik

Read Next

Thuthuvalai Health Benefits: ஒன்றா, இரண்டா? ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் தூதுவளை!

Disclaimer