
How To Make Andhra Style Garlic Egg Fry Recipe: விறுவிறுப்பான காலத்தில், நாம்மில் பலருக்கு சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் கூட நேரம் கிடைப்பதில்லை. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில், நெடியில் செய்யக்கூடிய புரதம் நிறைந்த ஒரு காலை உணவுக்கான ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
இது சட்டுனு தயாராவதுடன், சாதம் சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்றது. அந்தவகையில், பூண்டு முட்டை வறுவல் எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் பூண்டு முட்டை வறுவல் எப்படி செய்யணும் என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Nellikai Rasam: மணக்க மணக்க நெல்லிக்காய் ரசம்.. சளி இருமலை விரட்டும் அற்புத மருந்து.! இப்படி செஞ்சி பாருங்க.
தேவையான பொருட்கள்:
பூண்டு மசாலா அரைக்க
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
பட்டை
கிராம்பு - 3
மிளகு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
புளி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு முட்டை வறுவல் செய்ய
முட்டை - 6
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு
கொத்தமல்லி இலை
இந்த பதிவும் உதவலாம்: High Protein Breakfasts: காலையில் சாப்பிட வேண்டிய உயர் புரத உணவுகள் இங்கே..
பூண்டு முட்டை வறுவல் செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, மிளகு, பூண்டு, புளி, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- அகலமான கடாயில் எண்ணெயை சூடாக்கவும். உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் மற்றும் 2 காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்.
- கிளறாமல் நேரடியாக கலவையில் 6 முட்டைகளை உடைத்து ஊற்றவும். கடாயை மூடி 5 நிமிடம் சமைக்கவும்.
- முட்டைகள் ஒரு பக்கத்தில் சமைத்தவுடன், வெட்டுவதற்கு ஒரு கரண்டியை பயன்படுத்தி அவற்றை பெரிய துண்டுகளாக மாற்றி மறுபுறம் சமைக்கவும்.
- இப்போது சிறிய துண்டுகளாக வெட்டி மெதுவாக கலக்கவும்.
- முட்டை துண்டுகளை கடாயின் ஓரத்தில் தள்ளி எண்ணெய் சேர்க்கவும்.
- அரைத்த பூண்டு மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- முட்டையுடன் மசாலாவை கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும்.
- சுவையான பூண்டு முட்டை வறுவல் தயார்.
இந்த பதிவும் உதவலாம்: Carrot beetroot juice benefits: தினமும் கேரட் பீட்ரூட் சாறு அருந்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
முட்டை சாப்பிடுவதன் நன்மைகள்
நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்
நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு ஆய்வின் படி, 2 வேகவைத்த முட்டைகளை 6 வாரங்களுக்கு உட்கொண்டால், அது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
முட்டையில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், இதன் நுகர்வு இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது என்று அர்த்தமல்ல. முட்டையை சாப்பிடுவது 70 சதவிகிதம் பேருக்கு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது, அதேசமயம் 30 சதவிகிதம் பேர் மட்டுமே சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பை அதிகரிக்க முடியும்.
கண்களுக்கு நல்லது
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது, இது கண்களுக்கு நன்மை பயக்கும். பார்வையை மேம்படுத்த முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் மற்றும் பல வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
எலும்புகளை பலப்படுத்துகிறது
வைட்டமின் டி முட்டையில் அதிக அளவில் உள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இது ஒரு சூப்பர்ஃபுட் என்பதை நிரூபிக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Coffee and Cholesterol: அதிகமாக காஃபி குடிப்பது கொலஸ்ட்ரால் பிரச்சனையை அதிகரிக்குமா?
மூளைக்கு நன்மை பயக்கும்
முட்டையில் கோலின் உள்ளது. மூளைக்கு உதவியாக இருக்கும். இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் தான் தினமும் முட்டை சாப்பிடுவது மூளையை கூர்மையாக்கும் என்று கூறப்படுகிறது.
Pic Courtesy: Freepik
Read Next
Spring onion benefits: வெங்காயத்தாள் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version