Thu Oct 29, 2026 | 11:51 AM IST

Spring onion benefits: வெங்காயத்தாள் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Are spring onions good for you: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்களில் வெங்காயம் சிறந்த தேர்வாகும். வெங்காய குடும்பத்தைச் சேர்ந்த வெங்காயத்தாளும் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் வெங்காயத்தாள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
Spring onion benefits: வெங்காயத்தாள் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?Spring onion benefits: வெங்காயத்தாள் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

What does spring onion do to the body: அன்றாட உணவில் நாம் சேர்க்கப்படும் பல்வேறு உணவுப்பொருள்களில் வெங்காயமும் அடங்கும். இது பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாகும். அவ்வாறே வெங்காயம் மட்டுமல்லாமல் வெங்காய குடும்பத்தைச் சார்ந்த வெங்காயத்தாள் உணவின் சுவையை கூட்டுகிறது. அது மட்டுமல்லாமல், இது பல்வேறு ஆரோக்கியமான நலன்களைத் தருகிறது. உணவின் சுவையை அதிகரிக்கும் இந்த வெங்காயத்தாளானது பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.

வெங்காயத்தாளில் நிறைந்த ஊட்டச்சத்துக்கள்

வெங்காயத்தாள் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாகும். வெங்காயத்தைப் போலவே வெங்காயத்தாளிலும் கூட அதிகளவு கந்தகச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த அதிகளவிலான கந்தகச்சத்து பல்வேறு சுகாதார நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதில் குறைந்தளவிலான கலோரிகள் நிறைந்துள்ளது. இது தவிர, வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: வெள்ளை வெங்காயம் Vs சிவப்பு வெங்காயம் - அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்டது எது?

வெங்காயத்தாள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமானத்தை எளிதாக்குவதற்கு

வெங்காயம் பசியைத் தூண்டும் உணவாக எப்போதும் விரைவான சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இரைப்பை அழற்சி, அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் பிற நிலைமைகள் உள்ளிட்ட கடுமையான செரிமான பிரச்சினைகள் இருப்பின் செரிமானத்தை விரைவுபடுத்த அடிக்கடி வெங்காயத்தாளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மல இயக்கத்தை எளிதாக்குகிறது. இது செரிமான அமைப்பை மிகவும் சுறுசுறுப்பாக்கவும், வீங்கிய குடல்களுக்கும் உதவுகிறது. செரிமான பிரச்சினை உள்ளவர்கள் காலை மற்றும் மாலை வேளையில் ஒரு நாளைக்கு இருமுறை போதுமான வெங்காயத்தை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். இது தவிர, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு வெங்காயத்தை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கண்களின் ஆரோக்கியத்திற்கு

வெங்காயத்தாளில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண்களின் வழக்கமான பார்வைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமாகும். மேலும் இதில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே கண் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். கூடுதலாக, கண்களை வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், பார்வை இழப்பை ஏற்படுத்தும் ஒரு கோளாறான மாகுலர் சிதைவை எதிர்த்துப் போராட வழிவகுக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

வெங்காயத்தில் இயற்கையாகவே அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, வெங்காயத்தாள் நல்ல HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், தீங்கு விளைவிக்கும் LDL கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இதய தசை செயல்பாட்டை மேம்படுத்தலாம். கூடுதலாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பைக் குறைப்பதில் இது மிகவும் நன்மை பயக்கும்.

எலும்புகளைப் பலப்படுத்துவதற்கு

வெங்காயத்தாளில் குறிப்பிடத்தக்க அளவிலான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை இந்த ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகக் கருதப்படுகிறது. எலும்புகள் சாதாரணமாக செயல்பட இந்த வைட்டமின்கள் மிகவும் அவசியமாகும். இதில் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியில் பங்களித்து எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது. அதே சமயம், வைட்டமின் கே எலும்பு அடர்த்தியைப் பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Onion Rice Recipe: வெறும் 2 வெங்காயம் இருந்தா போதும்… 10 நிமிஷத்தில் சுவையான ரைஸ் ரெடி!

சருமப் பொலிவை அதிகரிக்க

உடலில் கொலாஜன் உற்பத்திக்குக் காரணமாக வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் வெங்காயத்தாளில் நிறைந்து காணப்படுகிறது. கொலாஜன் ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, இவை சருமத்திற்கு தேவையான பளபளப்பு மற்றும் மென்மைத் தன்மையை அளிக்கிறது. இவை சுருக்கங்களைத் தடுக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க

வெங்காயத்தாளில் சல்பர் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கூடுதலாக, இது புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதற்கு இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் அல்லைல் சல்பைடு போன்ற பொருட்களே காரணமாகும். இவை புற்றுநோய் செல்கள் வளரக் காரணமான நொதிகளைத் தடுக்கிறது. எனவே வெங்காயத்தாளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Chinna Vengayam Benefits: பேரு தான் சிறுசு.. பலன்களோ மலை அளவு.! சின்ன வெங்காயத்தின் அற்புதங்கள் இங்கே..

Image Source: Freepik

Read Next

→ Heart Attack: மாரடைப்பு வந்தவருக்கு உடனடியாக குடிக்க தண்ணீர் கொடுக்கலாமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.