What diseases are cured by wheatgrass: இன்றைய கலத்தில் மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். எனினும் சில இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் நாம் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இந்நிலையில், பெரும்பாலானோர் தங்கள் உடல் எடையைக் குறைத்து, வாழ்க்கையில் ஃபிட்டாக இருக்க தினமும் போராடி வருகின்றனர். இதற்கு பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவுகளைத் தொடர்ந்து தேடி வருகிறோம்.
இதற்கு ஒரு சிறந்த தேர்வாக கோதுமை புல் அமைகிறது. பொதுவாக, கோதுமை புல் என்பது ட்ரிட்டிகம் ஏஸ்டிவம் தாவரத்தின் குடும்பத்தைச் சேர்ந்த கோதுமை செடியின் இளம் புல் ஆகும். இது மிகவும் ஆரோக்கியமானதாக மாற்றக்கூடிய சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். கோதுமை புல் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக நன்கு அறியப்படுகிறது. குறிப்பாக, இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. மேலும் இதில் இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ளது. இது தவிர, இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: புற்றுநோயை கூட கட்டுப்படுத்துமாம்… இந்த டீயின் நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
ஆய்வு ஒன்றில், கோதுமை புல் ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அன்றாட வாழ்வில் கோதுமைப் புல் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
அன்றாட வழக்கத்தில் கோதுமை புல் பொடியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
உடல்நலப் பிரச்சினைகளை உடனடியாகச் சமாளிக்க கோதுமை புல் பொடியைப் பயன்படுத்த சில எளிய வழிகள் உள்ளன.
கோதுமை புல் சாறு
கோதுமை புல் இலைகளால் தயாரிக்கப்படும் கோதுமைப் புல் சாறு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கோதுமை புல்லிற்குப் பதிலாக, கோதுமை புல் பொடியைப் பயன்படுத்துவது எளிதானதாகும். இது தவிர, ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி மற்றும் இஞ்சி போன்றவற்றால் செய்யப்பட்ட செய்யப்பட்ட சாற்றில் ஒரு ஸ்பூன் கோதுமை புல் பொடியைச் சேர்ப்பது நன்மை பயக்கும்.
காலையில் முதலில் வெறும் வயிற்றில் இந்த சாற்றைக் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடையிழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் இது செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எனினும், கோதுமை புல் சாற்றை மிதமாக எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
கோதுமை புல் ஸ்மூத்தி
கோதுமை புல் ஸ்மூத்தியானது உங்களுக்குப் பிடித்தமான பழ ஸ்மூத்திகளில் ஏதேனும் ஒன்றைத் தயாரித்து, அதில் ஒரு ஸ்பூன் கோதுமை புல் பொடியைச் சேர்ப்பதாகும். இதில் கோதுமை புல்லின் கசப்பைக் குறைப்பதற்கு பழத்தின் அளவை அதிகரிக்கலாம். மேலும் இதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து அருந்துவதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஆற்றல் ஊக்கியாகவோ அல்லது உடற்பயிற்சிக்கு முந்தைய பானமாகவோ செயல்படுகிறது. பெரும்பாலும் கோதுமை புல் ஸ்மூத்தி ஒரு உடற்பயிற்சிக்கு முந்தைய பானமாக அமைகிறது.
கோதுமை புல் மவுத்வாஷ்
கோதுமை புல் பவுடரை மவுத்வாஷ் ஆக தயாரித்து பயன்படுத்தலாம். இது குளோரோபிலின் சிறந்த மூலமாகும். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய ஒரு கீமோ-புரதம் ஆகும். இது பற்களில் துவாரங்கள், ஈறு தொற்று போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த வாய் சுகாதாரத்தைப் பராமரிப்பதில் மிகுந்த நன்மை பயக்கும். எனவே, வழக்கமான பற்பசை அல்லது மவுத்வாஷில் கோதுமை புல் பொடியைச் சேர்க்கலாம். மேலும் கோதுமைப் புல் பொடியைப் பயன்படுத்துவதன் மூலம் துவாரங்களைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Arugampul Benefits: உடல் எடையை சட்டென்று குறைக்க அருகம்புல் போதும்! ரகசியம் தெரியுமா?
கோதுமை புல் ஹேர் பேக்
கோதுமை புல் பொடியை தண்ணீரில் சேர்த்து ஒரு சிறந்த அற்புதமான ஹேர் பேக்கை உருவாக்கலாம். இது ஒரு பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை தலைமுடியில் 15-20 நிமிடங்கள் தடவி, பின்னர் தலைமுடியை நன்றாகக் கழுவலாம். இது பொடுகைப் போக்கவும், முடியின் வேர்களைப் பலப்படுத்தவும் உதவுகிறது.
கோதுமை புல் ஃபேஸ் பேக்
கோதுமை புல்லில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் முகப்பருவைக் குறைக்கவும், தடுக்கவும் உதவுகிறது. இதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய சில ஃபேஸ் பேக்குகளிலும் சிறிது சிறிது கோதுமை புல் பொடியைச் சேர்த்து பயன்படுத்தலாம். இதை வாரத்திற்கு ஒரு முறை தடவலாம். இது ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் முகப்பரு இல்லாத சருமத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Arugampul Benefits: என்ன பிரச்னையா இருந்தாலும் அசால்ட்டா தட்டி விடும் அருகம்புல்.!
Image Source: Freepik