தலை முதல் கால் வரை பல அரோக்கிய நன்மைகளை வழங்கும் லெமன் கிராஸ் (Lemon Grass) குறித்து நீங்கள் முழுமையாக அறிந்தால், இதனை கண்டிப்பாக விடமாட்டீர்கள். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குறித்து மக்கள் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
லெமன் கிராஸ் குறித்து மக்கள் பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இது ஒரு தாவர வகையாகும். குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் இது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

செரிமான பிரச்சனை தீரும்
வயிறு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க லெமன் கிராஸ் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் உள்ள சிட்ரல், அஜீரண கோளாரை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்க உதவும்.
எடை குறையும்
லெமன் கிராஸ் எண்ணெயை உங்கள் வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது. இதனால் உடல் எடை குறைய உதவுகிறது.
இதையும் படிங்க: Dark Chocolate Benefits:நம்புங்க!! இந்த சாக்லேட்-ல எக்கச்சக்க நன்மைகள் கொட்டிக்கிடக்கு!
இரத்த அழுத்தம் கட்டுப்படும்
லெமன் கிராஸில் அதிக பொட்டாசியம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இரத்த சோகையை நீக்கும்

லெமன் கிராஸ் எண்ணெயை உணவில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். இதில் ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது.
அழகு பராமரிப்பு
தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பில் லெமன் கிராஸ் எண்ணெயை இணைத்துக்கொள்ளலாம். இது உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் இது உச்சந்தலை அரிப்பை கட்டுப்படுத்தும்.
Image Source: Freepik