நீங்க இந்த கொலஸ்ட்ரால் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்கணும்

  • SHARE
  • FOLLOW
நீங்க இந்த கொலஸ்ட்ரால் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்கணும்

தவிர்க்க வேண்டிய கொழுப்பு உணவுகள்

இதில் தவிர்க்க வேண்டிய அதிக கொழுப்பு உள்ள சில உணவுகள் குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!

சீஸ்

அதிகளவிலான கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளில் சீஸூம் உள்ளது. அதாவது ஒரு துண்டு சீஸில் கிட்டத்தட்ட 20 முதல் 25 கிராம் வரையிலான எடை இருக்குமாம். மேலும், இதில் 20 மில்லிகிராம் அளவிலான கொலஸ்ட்ரால் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே கொழுப்பு உணவான சீஸ் தவிர்ப்பது நல்லது.

முழுகொழுப்புள்ள தயிர்

தயிரில் பொதுவாக புரோபயாடிக் பண்புகள் அதிகம் காணப்படுகின்றன. இவை வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்க உதவுகிறது.

அதேசமயம், குறைந்த கொழுப்பு கொண்ட பாலில் இருந்து தயார் செய்யப்படும் தயிரை எடுத்துக் கொள்வது நல்லது. கொழுப்பு நீக்கப்படாத அல்லது முழுமையான கொழுப்பு கொண்ட பாலில் இருந்து பெறப்பட்ட தயிரை எடுத்துக் கொள்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

ஃபாஸ்ட் ஃபுட்

இன்றைய வாழ்க்கை முறையில், துரித உணவுகளின் பிடிப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடிக்கடி எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு அதிக ஆபத்தை உண்டாக்கும். ஏனெனில், இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் மிக அளவிலான கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது.

மேலும், இதில் மைதா, சீஸ், எண்ணெய் போன்ற பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே உடலின் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதாகவே அமைகின்றன. எனவே ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

பொரித்த மற்றும் வறுத்த உணவுகள்

பொதுவாக, பொரித்த உணவுகளில் டிரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கொண்டிருப்பவர்கள், இந்த பொரித்த மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையுடன் இன்னும் சில தீய விளைவுகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: High Cholesterol Foods: உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கா? இந்த உணவுகளை எடுக்க வேண்டாம்

இனிப்பு பொருள்கள்

நாள்தோறும் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருளான சர்க்கரை, உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தருகிறது. இதில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த உணவுகள் உடனடியாக இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். உயர் கொழுப்பு பிரச்சனை கொண்டிருப்பவர்கள், இந்த இனிப்பு வகைகள் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

முட்டை

முட்டையில் அதிகளவில் புரதச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனினும், முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் காணப்படுகிறது.

முட்டையின் முழு மஞ்சள் கருவை எடுத்துக் கொள்வது, இரத்தத்தில் கொலஸ்ட்ராலை மிக வேகமாக மற்றும் உடனடியாக அதிகரித்து விடும். எனவே உயர் கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் முட்டை மஞ்சள் கரு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இது போன்ற இன்னும் பல உயர் கொலஸ்ட்ரால் உணவுகள் உள்ளன. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை ஆராய்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், இவை இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்

Image Source: Freepik

Read Next

Benefits of kheer: குளிர்காலத்தில் கீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer