இந்த யோகாக்கள் உங்கள் கண் பார்வையை மேம்படுத்த உதவும்..

  • SHARE
  • FOLLOW
இந்த யோகாக்கள் உங்கள் கண் பார்வையை மேம்படுத்த உதவும்..

கண் பார்வை ஆரோக்கிய யோகாக்கள்

நீங்கள் நினைப்பதை விட கண் பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, குறைந்தது 100 கோடி மக்களுக்கு அருகில் அல்லது தொலைதூர பார்வை குறைபாடு உள்ளது, இது தடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது இன்னும் கவனிக்கப்படாமல் உள்ளது.

இதையும் படிங்க: உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்

மங்கலான கண்பார்வை

மங்கலான கண்பார்வை இப்போது ஒரு பெரிய சவாலாக உள்ளது. சிறு குழந்தைகளிடம் கூட இந்தப் பிரச்சனையைப் பார்க்கிறோம். குறிப்பாக பள்ளி செல்லும் பல குழந்தைகள் கண் பிரச்சனையால் கண்ணாடி அணிகின்றனர். ஆனால் யோகா உங்கள் பார்வையை மேம்படுத்தும் என தெரியுமா? வீட்டிலேயே எளிய ஆசனங்கள் மூலம் கண்பார்வையை மேம்படுத்தலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

உள்ளங்கை யோகாக்கள்

இரண்டு கால்களையும் நீட்டி உட்காருங்கள். ஆழ்ந்த மூச்சை எடுத்து உடலை ஒரு தளர்வான நிலைக்கு கொண்டு வாருங்கள். உங்கள் இரு உள்ளங்கைகளையும் நன்றாக தேய்க்கவும். உள்ளங்கைகளை சூடாக்கிய பிறகு, அவற்றை உங்கள் இரு கண்களின் மேல் வைக்கவும். கண்கள் வெப்பத்தை உறிஞ்சும் வரை கைகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு, கண்களைத் திறக்காமல், கைகளை அதே நிலைக்குக் கொண்டு வந்து, மீண்டும் நன்றாகத் தேய்த்து, முன்பு போலவே கண்களின் மீது வைக்கவும். இதை மூன்று முறை செய்யவும்.

கண் சிமிட்டுதல்

ண்களை முழுமையாக திறந்து கொண்டு தளர்வான நிலையில் உட்கார வேண்டும். உங்கள் கண் இமைகளை குறைந்தது 10 முறை வேகமாக சிமிட்டவும். அதன் பிறகு கண்களை மூடிக்கொண்டு 20 வினாடிகள் அப்படியே இருங்கள். மெதுவாக உங்கள் கண்களைத் திறந்து ஆழமாக மூச்சு விடுங்கள். இதே பயிற்சியை 5 முறை செய்யவும்.

கட்டை விரல் யோகா

உங்கள் கால்களை நீட்டி உட்காரவும். உங்கள் இரு கைகளையும் நீட்டி உங்கள் விரல்களை மடியுங்கள். கட்டைவிரல் வானத்தை நோக்கி இருக்க வேண்டும். இரண்டு கட்டைவிரல்களும் உங்கள் கண்களுக்கு இணையாக இருக்க வேண்டும். இப்போது உங்கள் தலையைத் திருப்பாமல், உங்கள் கண்களை இடதுபுறமாக ஒருமுறை திருப்பிப் பாருங்கள். மீண்டும் அதே நிலைக்கு வந்து மீண்டும் வலது கையைத் திருப்பி மேலே பார்க்கவும். இதை 10 முதல் 20 முறை செய்யவும்.

இதையும் படிங்க: ஆரோக்கியமான முடியை பெற உதவும் யோகாக்கள் இவை தான் தெரியுமா?

இந்த முறை கண்களை பாதுகாக்க உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணரும் பட்சத்தில் உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

kidney Yoga Poses: கிட்னி ஆரோக்கியமாக இந்த யோகா ஆசனங்களை செய்யுங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்