Habits That Increase Eye Problems: உடலில் உள்ள உறுப்புகளில் கண் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சில அன்றாட நடவடிக்கைகளின் காரணமாக, நாம் நமது கண் ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறோம். குறிப்பாக, இன்றைய நவீன காலத்தில் திரைகளின் அதிக பயன்பாட்டால் கண் பார்வை மோசமாகுவதுடன், சிதைக்கக் கூடிய பழக்கங்களாகவும் அமைகிறது. இந்த பழக்கங்களில் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாமல், பாதிப்பில்லாதவையாகத் தோன்றினாலும், சரிபார்க்கப்படாமல் விடுவது நீண்ட கால பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனினும், கண்களை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் முதல் படியாக இந்த பார்வை பிரச்சனைக்கான விளைவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கண் பார்வையை பலவீனமாக்கும் பொதுவான பழக்க வழக்கங்கள்
அதிக திரை நேர பயன்பாடு
பொதுவாக டிஜிட்டல் பயன்பாட்டின் அறிகுறிகளாக கண்களில் வறட்சி, எரிச்சல் மற்றும் பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் தென்படலாம். இவை கணினிகள், தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்டுகள் அல்லது பிற சாதனங்களின் அதிக பயன்பாட்டால் ஏற்படுவதாகும். இந்த காட்சிகளின் நீல ஒளி தூக்க சுழற்சிகளில் தலையிடலாம்.
இதனைத் தவிர்க்க, 0-20-20 விதியைப் பின்பற்றலாம். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20-வினாடி இடைவெளி எடுத்து, 20 அடி தூரத்தில் உள்ள எதாவது ஒன்றை உற்றுப் பார்க்க வேண்டும். மேலும், திரைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது அல்லது நெருக்கமாக வேலை செய்வது போன்றவை குழந்தைகளின் பார்வைத் திறனைப் பாதிக்கும் என்பதால், வெளியில் விளையாடும் பழக்கத்தைக் கொண்டு வருவது பாதுகாப்பானது.

கண் வலி அறிகுறிகளை புறக்கணிப்பது
சாதாரண கண் வலி அறிகுறிகளை புறக்கணிப்பதன் காரணமாகவே பெரிய அளவிலான கண் பாதிப்புகள் ஏற்பட நேரிடலாம். இதில் கண் வலி அறிகுறிகளாக தலைவலி, நாள்பட்ட உலர் கண்கள் அல்லது கண் சோர்வு போன்ற பொதுவானதாகக் கருதப்படுகிறது. இந்த அறிகுறிகள் புறக்கணிக்கப்படுவதன் காரணமாக, பல்வேறு கடுமையான நோய்கள் ஏற்படலாம்.
எனவே ஒருவர் தொடர்ந்து இது போன்ற கண் வலி அறிகுறிகளைச் சந்திக்க நேர்ந்தால் அல்லது ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக கண் பராமரிப்பு நிபுணரை அணுக வேண்டும். இதன் மூலம் பெரிய சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: சாதாரண விஷயமில்ல! மோசமான குடல் ஆரோக்கியத்தை குறிக்கும் முக்கிய அறிகுறிகள்!
பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடி அணியாமல் இருப்பது
வழக்கமான கண் பரிசோதனைகளின் உதவியுடன் சிறந்த பார்வையை உறுதிப்படுத்துதல், கண் பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலானோர் இந்த பரிசோதனைகளை புறக்கணிக்கின்றனர். அவர்கள் தங்கள் பார்வை நன்றாக இருப்பதாக நம்புகின்றனர். சில நோய்களுக்கு அறிகுறிகள் தாமதமாகவேத் தோன்றும். இதில் பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அணியவில்லை என்றால் பிரச்சனை இன்னும் மோசமாகலாம்.
எனவே இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது நல்லது. குறிப்பாக நாற்பது வயதிற்குட்பட்டவராக இருப்பின் அவர்கள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும் அதன் பிறகு ஆண்டு தோறும் கண்களை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சுய மருந்து உபயோகிப்பது
இந்த பழக்கத்தை பெரும்பாலானோர் செய்து வருகின்றனர். இதில் பலரும் கண் மருத்துவரிடம் செல்வதற்குப் பதிலாக நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். எப்போதாவது எரிச்சல் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அதனைப் போக்க உள்ளூர் மருந்தகம் பரிந்துரைக்கும் வழக்கமான கண் சொட்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இவை மலிவானவை மற்றும் உடனடியாக நிவாரணம் அளிப்பதாக இருப்பினும், காலப்போக்கில், அவை பெரும் தீங்கு விளைவிக்கும்.
எனவே, கண் மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே கண் சொட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். வேறு சில மருந்துகளை உபயோகித்த பின்னர் கண் எரிச்சல் ஏற்பட்டாலோ, அல்லது பிரச்சனை மோசமாகினாலோ உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.
புற ஊதாக் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாப்பது
பொதுவாக சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் காலப்போக்கில் கண்களை சேதப்படுத்தும். இதனால் கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு அபாயம் அதிகமாகும். எனவே 100% UV கதிர்களைத் தடுக்கும் சன்கிளாஸ்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கண்களைப் பாதுகாக்கலாம். எனவே கண்களைப் பாதுகாக்க UV கதிர்வீச்சை முழுவதுமாக வடிகட்டக்கூடிய சன்கிளாஸ்களை அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
இது போன்ற பழக்க வழக்கங்களால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நாளடைவில் தீவிர பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? முதலில் இத கவனிங்க!
Image Source: Freepik