Global Emergency: மனித இனத்துக்கே பேராபத்து!

  • SHARE
  • FOLLOW
Global Emergency: மனித இனத்துக்கே பேராபத்து!

உலகளவில் மனிதர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருவதால் ஏணைய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மைக்ரோபிளாஸ்டிக்கால் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. காற்று, நீர், மண், உணவு மற்றும் மனித உறுப்புகளில் கூட இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மூலம் ஏற்படும் பிரச்சனைகள்

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஒரு தீவிரமான உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையாகும், ஏனெனில் இது மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

தி கார்டியனின் அறிக்கையின்படி, வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகளின்படி மூளை உட்பட மனிதர்களின் முக்கிய உறுப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் குவிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை

மேலும் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு இன்னும் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். மனித நுரையீரல், நஞ்சுக்கொடி, இனப்பெருக்க உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகங்கள், முழங்கால் மற்றும் முழங்கை மூட்டுகள், இரத்த நாளங்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகியவற்றில் பிளாஸ்டிக்கின் சிறிய துண்டுகள் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பிளாஸ்டிக் மாசுபாட்டைச் சமாளிக்க, உலகளாவிய அவசரநிலையை அறிவிக்க வேண்டியது இப்போது கட்டாயமாகும் என்று துருக்கியில் உள்ள குகுரோவா பல்கலைக்கழகத்தில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் படிக்கும் செடாட் குண்டோக்டு கூறியுள்ளார்.

காற்று, நீர், உணவு, மனித உடலில் பிளாஸ்டிக்

மனிதர்கள் மைக்ரோபிளாஸ்டிக்ஸுக்கு உள்ளாகிறார்கள் என்றும் இவை 5 மிமீ விட்டம் கொண்ட துண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் காற்று, நீர் மற்றும் உணவில் கூட பரவலாக பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மூளையில் இருக்கும் மைக்ரோபிளாஸ்டிக் கட்டமைப்பு குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, இது தற்போது சக மதிப்பாய்வுக்கு உட்பட்டுள்ளது மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களால் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக்

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட மூளை மாதிரிகளில் சராசரியாக எடையில் 0.5% பிளாஸ்டிக் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக ஆய்வின் முதன்மை ஆசிரியர், நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் நச்சுயியலாளர் மற்றும் மருந்து அறிவியல் பேராசிரியரான மேத்யூ கேம்பன் கூறுயுள்ளார்.

இது மிகவும் ஆபத்தானது என காம்பன் கூறினார். மனிதர்கள் மூளையில் நான் நினைத்ததை விட அதிகமான பிளாஸ்டிக் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடல்களின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை ஆகியவற்றைப் பரிசோதித்ததில் அனைத்திலும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 91 மூளை மாதிரிகள் மற்ற உறுப்புகளை விட சராசரியாக 10 முதல் 20 மடங்கு அதிகமாக மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன.

நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் நச்சுயியல் வல்லுநரும் மருந்து அறிவியல் பேராசிரியருமான மேத்யூ கேம்பென் கருத்துப்படி, இந்த முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினார்.

மூளை உட்பட முக்கியமான மனித உறுப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் குவிந்து வருவதாக வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன, முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இன்னும் அவசர நடவடிக்கைகள் என அழைப்பு விடுத்துள்ளனர்.

Image Source: FreePik

Read Next

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? முதலில் இத கவனிங்க!

Disclaimer

குறிச்சொற்கள்