நம்பினாலும் நம்பாவிட்டாலும், காலையில் முதலில் உடற்பயிற்சி செய்வது என்பது பழகிவிட்டால் அது மிக எளிய செயல். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதோடு அந்த நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. உங்கள் மனநிலையை நாள்முழுவதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கக் கூடிய வழிமுறைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
உடற்பயிற்சி செய்ய எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்?
உடற்பயிற்சியில் மனநிலையை மேம்படுத்தும் பலன்களைப் பெற, உங்கள் வொர்க்அவுட்டின் கால அளவைக் கருத்தில் கொள்வது அவசியம். வாரத்தில் ஐந்து நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிட மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சியை இலக்காகக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. அன்றாடம் முறையான உடற்பயிற்சிகளை செய்வது உங்கள் மனநிலையை புத்துணர்ச்சியோடும் நம்பிக்கையோடும் வைத்திருக்க உதவும்.
முக்கிய கட்டுரைகள்
உங்கள் மனநிலையை அதிகரிக்க சிறந்த பயிற்சிகள்
காலை ரன்னிங்
காலை ரன்னிங் அல்லது வேகமான நடைப்பயணம் உங்கள் நாளை சிறப்பாக தொடங்க உதவுகிறது. அதோடு உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் அன்றைய நாளை சிறப்பாக அமைக்கவம் இது சிறந்த வழியாகும். புதிய காற்று, அமைதியான சூழல் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவை எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகின்றன, இது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை ஊக்குவிக்கிறது.
HIIT உடற்பயிற்சி (High-intensity interval training)
HIIT உடற்பயிற்சிகளில் கார்டியோவாஸ்குலர் ஃபிட்னஸ் அடங்கும், இது எண்டோர்பின் மற்றும் செரோடோனின் அளவை உயர்த்தி, உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. HIIT உடற்பயிற்சிகளை ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் முடிக்க முடியும், இது பிஸியான கால அட்டவணையில் இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
யோகா
யோகா உங்கள் மனநிலையை அதிகரிக்கவும், அமைதி மற்றும் தளர்வு உணர்வை ஊக்குவிக்கவும் அருமையான பயிற்சிகள். இந்த நடைமுறைகள் உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. யோகா பயிற்சி பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக உங்களை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைக்க உதவுகிறது.
குழு உடற்பயிற்சி வகுப்புகள்
ஜூம்பா, கிக் பாக்ஸிங் அல்லது ஸ்பின்னிங் போன்ற குழு உடற்பயிற்சி வகுப்பில் சேர்வது, உங்கள் மனநிலையை அதிகரிக்க வேடிக்கையான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலை வழங்கும். பொதுவான இலக்கை பகிர்ந்துக் கொள்ளும் முகம் தெரியாதவர்கள் உடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். உங்கள் மனநிலையை உயர்த்துவதற்கும், உடல் தகுதியை மேம்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.
ஸ்விம்மிங்
முழு உடலையும் இயக்கக் கூடிய உடற்பயிற்சி ஸ்விம்மிங். இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எண்டோர்பின்களையும் வெளியிடுகிறது. உடல் முழுவதையும் செயல்பட வைத்து, உங்களை ரெஃப்ரெஷ் ஆக வைக்கிறது. மனதில் ஒரு அமைதியை வர வைத்து, மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.
நடனம்
நடனத்தின் மூலம் உங்கள் மனநிலையை மேம்படுத்த முடியும். எதுவும் அறியாமல் மகிழ்ச்சியோடு ஆடுவது ஒரு முறை என்றாலும் முறையாக தினசரி நடனம் கற்றுக் கொண்டு ஸ்டெப் போடுவது தினசரி வாழ்க்கையில் புத்துணர்ச்சி அளிக்கும். தாளத்திற்கு ஏற்ப நகர்வது, தினசரி மியூசிக் கேட்பது எண்டோர்பின்களை வெளியிட வைக்கிறது. இது சிறந்த வொர்க் அவுட் மட்டுமல்ல, ஒரு ஆக்கப்பூர்வமான செயலும் ஆகும்.
image source: freepik