Sexual Wellness: உடலுறவுக்குப் பின் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய அந்த 3 விஷயங்கள் என்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Sexual Wellness: உடலுறவுக்குப் பின் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய அந்த 3 விஷயங்கள் என்ன தெரியுமா?

பல பெண்கள் உடலுறவு அல்லது இரத்தப்போக்குக்கு பின் பிறப்புறுப்பு எரியும் உணர்வை அனுபவிக்கிறார்கள். இன்னும் சிலர் உடலுறவுக்குப் பின் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள். இவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். உடலுறவின் போது, ​​உடலுறவுக்கு பின்னரும், நோய்த்தொற்றுகளைத் தவிர்க்கவும், பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பெண்கள் இந்த 3 விஷயங்களைச் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவற்றை பற்றி பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Causes Of Hip Pain: மாதவிடாய் காலத்தில் இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதுதான் காரணம்!

உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிக்கவும்

பல சமயங்களில் உடலுறவின் போது பெண்களின் பிறப்புறுப்பில் பாக்டீரியாக்கள் நுழைகின்றன. இந்நிலையில், ஏதேனும் பாக்டீரியா யோனி பாதையை அடைந்திருந்தால், சிறுநீர் கழிப்பதன் மூலம் பாக்டீரியா வெளியேறும் வாய்ப்பு அதிகம். இது தவிர, STI மற்றும் UTI இரண்டையும் தவிர்க்க ஆணுறை பயன்படுத்துவது முக்கியம்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்

உடலுறவுக்குப் பிறகு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். உடலுறவுக்கு முன்னும் பின்னும் இது மிகவும் முக்கியமானது. இதனால் சோர்வு குறைவதுடன் உடலுக்கும் சக்தி கிடைக்கும். அதுமட்டும் அல்ல உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : மாதவிடாய் ஓட்டம் குறைவாக இருக்கா.? அப்போ இதை குடிக்கவும்.!

பிறப்புறுப்பை நன்றாக சுத்தம் செய்யவும்

உடல் உறவுக்குப் பிறகு, பெண்கள் பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறப்புறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்த வேண்டாம். வெந்நீர் பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு செய்வது தொற்றுநோயைத் தடுக்க உதவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Sexual Health: பெண்கள் பாலியல் ரீதியாக சந்திக்கும் 5 பிரச்சனைகள் இதுதான்!

Disclaimer

குறிச்சொற்கள்