Early Signs Of Heart Failure: இதய செயலிழப்பு திடீரென ஏற்படுவதாக இருப்பினும், சில அறிகுறிகளை முன்னதாகவே உணர்த்தும். இதயம் ஒழுங்கற்றதாக இருக்கும் வேளையிலேயே இந்த அறிகுறிகளை உடல் உணரும். இதய செயல்பாடுகளில் தொந்தரவுகள் நிகழும் போது உண்டாகும் ஆரம்ப அறிகுறிகள் நுட்பமானதாக இருக்கலாம். ஆனால், இவற்றைப் புறக்கணிப்பது என்பது உயிருக்கு ஆபத்தான ஒன்றாகும். பலரும் இந்த அறிகுறிகளை உணர்ந்திருப்பினும், இது சாதாரணமானது என நினைத்துப் புறக்கணித்து விடுவர். சமீப காலமாக பலரும் இந்த இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இது குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும். இதய செயலிழப்பிற்கான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து அகட்சாவின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் அன்பு பாண்டியன் விவரித்துள்ளார்.
இதய செயலிழப்புக்கான காரணம்
இதய செயலிழப்புக்கான அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளும் முன், அது எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதயம் இரத்தத்தை திறம்பட செயல்படுத்தும் திறனை இழக்கும் போது அல்லது இதய தசைகள் சேதமடைதல், இதய செயல்பாடுகளில் தாமதம் போன்றவை ஏற்படும் போது, இதய செயலிழப்பு ஏற்படலாம். பெரும்பாலும், கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களே இதய செயலிழப்பால் அதிகம் பாதிக்கப்படுவர். இது தவிர, மரபணு நோய்கள், தவறான இதய வால்வு கொண்ட நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளும் இதய செயலிழப்பால் பாதிக்கப்படுவர். இதய செயலிழப்பு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. எனவே இதய செயலிழப்பின் அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெறுவது முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: High Blood Pressure: உயர் இரத்த அழுத்தத்தை உடனடியாக பாதிக்கும் காரணிகள் என்னென்ன தெரியுமா?
இதய செயலிழப்பின் ஆரம்ப கால அறிகுறிகள்
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இதய செயலிழப்பை ஏற்படுத்தும் ஆரம்ப கால அறிகுறிகள் சிலவற்றைக் காண்போம்.
சோர்வு
உடல் சோர்வு ஏற்படுவதும் இதய செயலிழப்புக்குக் காரணமாகலாம். அதாவது உடல் திசுக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உடலுக்குப் போதுமான அளவு இரத்தம் கிடைக்காததால், சில நேரங்களில் சோர்வு ஏற்படலாம். இதன் பொதுவான அறிகுறியாக மயக்கம் ஏற்படும். குறிப்பாக, திடீரென எழுந்து நிற்கும் போது அல்லது வேகமாக நடக்கும் போது மயக்கம் ஏற்படலாம். இது இதய செயல்பாடு அசாதாரணத்தினால் ஏற்படும்.
மூச்சு விடுவதில் சிரமம்
மாரடைப்பின் பொதுவான அறிகுறி சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதாகும். இது மன அழுத்தம் அல்லது உடல் செயல்பாடு சூழ்நிலைகளில் மட்டும் ஏற்படலாம். இதயம் சாதாரணமாக செயல்படாத போது இரத்த நாளங்களில் இரத்தம் பின்வாங்குவதற்கு வழிவகுக்கும். இந்த சூழ்நிலையில் மூச்சு விடுவது கடினமாக இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படின் உடனடியான மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Heart Failure Symptoms: இதயம் செயலிழப்பு ஏற்படுவ முன்பே உணர்த்தும் அறிகுறிகள்
எடிமா அல்லது வீங்கிய கணுக்கால்
இதயம் சரியாக பம்ப் செய்ய முடியாத போதே இதய செயலிழப்பு ஏற்படுகிறது. கால்கள், கணுக்கால் போன்ற உடலின் கீழ் பகுதியில் பயன்படுத்தப்பட்ட இரத்தம் சுத்திகரிப்புக்காக இதயத்திற்கு மீண்டும் செலுத்தப்படுவதில்லை. இதனால், இவை கணுக்கால்களில் குவிந்து வீக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு கணுக்கால் வீக்கத்துடன் திடீரென உடல் எடை அதிகரிப்பது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
நெஞ்சு வலி
பலரும் நெஞ்சு வலி ஏற்படுவதை சாதாரணமாகக் கருதி அலட்சியம் செய்கின்றனர். இதில் மார்பு வலி இதய செயல்பாடுகளில் ஏற்படும் பிரச்சனையின் முக்கிய் அறிகுறியாகும். எனினும், எல்லா நேரத்திலும் இதய பிரச்சனையாக இருக்காது. இதற்கு மற்ற பிரச்சனைகளும் இருக்கலாம். எனவே, எந்த நேரத்திலும் மார்பு வலி கூர்மையாக, அடிக்கடி, மற்றும் நீடித்ததாக ஏற்படின் அதை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
நெரிசல்
நெரிசல் உண்டாகும் போது இதயத்தில் பிரச்சனை ஏற்படலாம். அதாவது நுரையீரலில் திரவம் குவியும் போது, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளைச் சந்திக்கலாம். இவை இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். எனவே, மார்பு வலியுடன் கூடிய நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Cardiac Arrest Symptoms: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கார்டியாக் அரெஸ்ட்டின் முக்கிய அறிகுறிகள்