Factors That Affect Blood Pressure: இதய நோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்று உயர் இரத்த அழுத்தம் ஆகும். உயர் இரத்த அழுத்தம் என்பது தமனிச் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் மிக அதிகமாக இருப்பதாகும். இதனால், திசு சேதமடைய நிறைய வாய்ப்புள்ளது. மேலும் இவை இதயத்திற்குச் செல்லும் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் ஓட்டத்தைக் குறைத்து, இதய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இருக்காது. இந்த இரத்த அழுத்த அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் காரணிகளைக் குறித்து புனே, கரடி, அப்பல்லோ கிளினிக்குகளின் இருதயநோய் நிபுணரின் ஆலோசகர் டாக்டர் விக்ராந்த் கேஸ் அவர்கள் விளக்கியுள்ளார்.
இரத்த அழுத்த அளவுகள் அதிகரிக்க காரணமான காரணிகள்
உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு ஏராளமான காரணிகள் உள்ளன. அவற்றைப் பற்றிக் காண்போம்.
காஃபின்
இரத்த அழுத்தம் உடனடியாக அதிகரிப்பதற்கான காரணம் காஃபின் உட்கொள்வதாகும். காஃபின் குடிப்பது நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. காஃபினை அதிக அளவு எடுத்துக் கொள்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்திற்கான விளைவு அதிகமாக வெளிப்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart: இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்!
உணவுகள்
சில உணவுகள் இரத்த அழுத்த அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவை இரத்த அழுத்தத்தை உடனடியாக அதிகரிக்கச் செய்யலாம். குறிப்பாக, துரித உணவுகள், உப்பு நிறைந்த தின்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உப்பு நிறைந்த உணவுகள் போன்ற சோடியம் அதிகம் உள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். அதிக சோடியத்தை சாப்பிடுவது உடலில் தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என மருத்துவர் கூறுகிறார்.
மருந்துகள்
சில மருந்துகளை எடுத்துக் கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம். அந்த வகையில், ஸ்டீராய்டுகள், ஸ்டீராய்டுகள் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், மற்றும் சில வகையான ஆன்டிடிரஸன்ட்கள் அடங்கிய மருந்துகள் அடங்கும்.
மது அருந்துதல்
மிதமான அளவில் மது அருந்துவது சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பினும், அதிக அளவிலான ஆல்கஹாலை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆல்கஹால் அருந்துவது இரத்த நாளங்களை விரிவுபடுத்தும். எனினும், அதிகமாக உட்கொள்வது ஆல்கஹால் உள்ள இரத்த நாளங்களைச் சுருக்கி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart Tips: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகள்
புகை பிடிப்பது
புகைப்பிடிப்பதால் இரத்த அழுத்தம் உடனடியாக அதிகரிக்கலாம். அதாவது புகை பிடிக்கும் போது இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படலாம். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஆனால், இந்த விளைவு தற்காலிகமான ஒன்றாகும். தொடர்ந்து புகைப் பிடிப்பது, நீண்ட கால உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
மன அழுத்தம்
இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று மன அழுத்தம் ஆகும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். நீண்ட நாள்களாக மன அழுத்தத்தை அனுபவிக்கும் நபர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இது இதய நோய் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Failure Symptoms: இதயம் செயலிழப்பு ஏற்படுவ முன்பே உணர்த்தும் அறிகுறிகள்
Image Source: Freepik