Thu Oct 29, 2026 | 02:39 PM IST

Drinks For Heart Health: இந்த பானங்களை வெறும் வயிற்றில் குடியுங்கள்! இதய ஆரோக்கியம் மேம்படும்!

Drinks For Heart Health: இந்த பானங்களை வெறும் வயிற்றில் குடியுங்கள்! இதய ஆரோக்கியம் மேம்படும்!Drinks For Heart Health: இந்த பானங்களை வெறும் வயிற்றில் குடியுங்கள்! இதய ஆரோக்கியம் மேம்படும்!

இதயம் ஆரோக்கியமாக இருந்தாலே போதும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இதய ஆரோக்கியத்தை மேமப்டுத்த சில பானங்கள் உங்களுக்கு உதவும். இதற்காக நீங்கள் வெறு வயிற்றில் சில பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பானங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் இருந்து சிறந்த சுழற்சியை ஊக்குவிப்பது வரை பல நன்மைகளை அளிக்கும். ஆரோக்கியமான இதயத்திற்கு நீங்கள் குடிக்க வேண்டிய பானங்கள் இங்கே. 

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் உங்கள் நாளைத் தொடங்குங்கள். எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். இது ஆரோக்கியமான இதயத்தை ஆதரிக்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீயில் கேடசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் ஒரு கப் கிரீன் டீ குடிப்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

இதையும் படிங்க: Low Cholesterol Fruits: உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ், இரத்த நாளங்களை விரிவுபடுத்தக்கூடிய நைட்ரேட்டுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் ஒரு சக்தியாகும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்கும்.

கிரான்பெர்ரி ஜூஸ்

நெல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. அவை இதய நோய் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும். 

மஞ்சள் பால்

மஞ்சளில் குர்குமின் என்ற சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவை உள்ளது. வெதுவெதுப்பான பாலுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிப்பதால், கோல்டன் மில்க் எனப்படும் ஒரு இனிமையான பானம் உருவாகிறது. இது வீக்கத்தைக் குறைக்கவும், தொடர்ந்து உட்கொள்ளும் போது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவும்.

உங்கள் உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன், ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிக்க நினைவில் கொள்ளுங்கள். மேலும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள பானங்களை உங்கள் தினசரி வழக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் உடற்பயிற்சியை சேர்த்துக்கொள்ளுங்கள். 

Image Source: Freepik

Read Next

→ Lower Cholesterol Tips: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க நிபுணர் கூறும் சில வழிகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.