Fri Sep 11, 2026 | 10:47 PM IST

Eye Safety Tips: டிஜிட்டல் யுகம் பாஸ்.! கண்களை ஆரோக்கியமாக வைப்பது மிக முக்கியம்..

Eye Safety Tips: டிஜிட்டல் யுகத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் நேரத்தை திரையில் செலவிடத் தொடங்கியுள்ளனர். மொபைல், கணினி மற்றும் லேப்டாப் திரைகள் கண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பொழுதுபோக்கு முதல் வேலை வரை அனைத்தும் திரை அணுகல் தான்.

இதுதவிர புகைபிடித்தல், போதுமான தூக்கம் வராதது, உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது போன்ற தீய பழக்கங்களால் கண்களில் பல வகையான பிரச்னைகள் வர ஆரம்பித்துள்ளன. சிறு குழந்தைகள் கூட இப்போதெல்லாம் கண்ணாடி அணிகிறார்கள்.

கண்களை பாதுகாக்க வழிகள்

சிறுவயது முதலே கண்கள் பாதிப்படையத் தொடங்குகின்றன. இதில் 30 வயதுக்கு பின் கேட்கவா வேண்டும். 30 வயதுக்கு பிறகும் கண்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

வழக்கமான கண் பரிசோதனை முக்கியம்

ஆரோக்கியமான கண்களுக்கு கண் பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும். இதன் மூலம் கண் தொடர்பான நோய்களை எளிதில் கண்டறியலாம். உடனடியாக அந்த நோய்களுக்கு சிகிச்சையும் அளிக்க முடியும். கண்ணுக்கு கண்ணாடி தேவையா இல்லையா என்பதை அறிந்து மருத்துவர் பரிந்துரைப்படி உடனே அதை அணியவும் தொடங்கலாம். எனவே, வழக்கமான கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

திரை பயன்பாட்டை குறைப்பது முக்கியம்

மொபைல், லேப்டாப் மற்றும் கணினி திரைகள் கண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, திரையை குறைவாக பயன்படுத்த முயற்சிக்கவும். திரையில் அதிக நேரம் செலவிடுவதால் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. உண்மையில், நாம் திரைகளைப் பயன்படுத்தும் போது நம் இமைகளை மிகக் குறைவாகவே சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.

சத்தான உணவை சாப்பிடுங்கள்

உணவில் சத்துக்கள் இருப்பது மிகவும் அவசியம். உங்கள் உணவில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவைச் சேர்க்கவும். இத்தகைய உணவு பல கண் பிரச்சனைகளை சமாளிக்க உதவும். இதுவும் கண்புரை வராமல் தடுக்க உதவுகிறது.

யோகா செய்ய முயற்சி செய்யுங்கள்

ஆரோக்கியமான உடலுக்கு யோகா மிகவும் முக்கியமானது. தினமும் யோகா செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். சில யோகா ஆசனங்கள் பார்வையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். இந்த யோகாசனங்களை தொடர்ந்து செய்து வந்தால், கண் பிரச்சனைகள் குணமாகும்.

போதுமான தூக்கம் மிக முக்கியம்

கண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான தூக்கமும் மிகவும் அவசியம். தூக்கமின்மை உலர் கண் நோய்க்குறி மற்றும் கண் பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே, தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம்.

புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்

புகைபிடித்தல் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனால் கண்களில் பிரச்னையும் ஏற்படுகிறது. புகைபிடித்தல் அதிக அளவு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடிப்பது கான்ஜுன்க்டிவிடிஸ் மற்றும் விழித்திரை சிதைவு உள்ளிட்ட பல்வேறு கண் பிரச்சனைகளின் அபாயத்தை இது அதிகரிக்கிறது. சிகரெட் புகையால் கண்கள் சிவந்து, புண் மற்றும் வறட்சி ஏற்படும்.

ஒவ்வொரு மணி நேரமும் ஓய்வு அவசியம்

அலுவலகத்தில் பெரும்பாலான வேலைகள் திரையில்தான் நடக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் வேலையை விட்டு வெளியேற முடியாது, ஆனால் கண்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு மணி நேரமும் வேலையில் இருந்து ஓய்வு எடுப்பதே இதற்குச் சிறந்த விஷயம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 10 நிமிடங்கள் இடைவெளி எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் கண்களை மூடி அமைதியாக உட்கார வேண்டும். வேண்டுமானால் அலுவலகத்திற்கு வெளியே சென்று வரலாம்.

இந்த வழிகளை பின்பற்றி உங்கள் கண்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கலாம்.

Pic Courtesy: FreePik

Read Next

Stress Ulcer: உங்களுக்கு ஸ்ட்ரெஸ் அல்சர் பற்றி தெரியுமா? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை இங்கே!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content