Autism child : ஆட்டிசம் பாதித்த குழந்தையை வளர்ப்பது எப்படி? - பெற்றோர்களுக்கான டிப்ஸ்!

  • SHARE
  • FOLLOW
Autism child : ஆட்டிசம் பாதித்த குழந்தையை வளர்ப்பது எப்படி? - பெற்றோர்களுக்கான டிப்ஸ்!


எல்லா ஆட்டிஸ்டிக் குழந்தைகளும் ஒரே மாதிரியாக நடந்துகொள்வதில்லை, எனவே ஒரு குழந்தைக்கு என்ன வேலை செய்யும், மற்றொரு குழந்தைக்கு எது வேலை செய்யாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். மன இறுக்கம் கொண்ட குழந்தையை வளர்க்கும் பயணத்தில் அவர்களுக்கு உதவக்கூடிய மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை பெற்றோர்கள் அறிந்திருக்ககூடும்.

இருப்பினும், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை தினந்தோறும் கையாள்வது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் அளித்துள்ள சில பயனுள்ள குறிப்புகள் இதோ…

1.குழந்தையுடன் அதிகம் இணைந்திருங்கள்:

ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுடன் தொடர்புகொள்வது சவாலானதாக இருந்தாலும், ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையுடன் சிறப்பான பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்ன பேசுகிறார்கள், அவர்கள் என்ன மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இதன் மூலம் பெற்றோருக்கும், குழந்தைக்குமான பிணைப்பு அதிகரித்து, அவர்களுடைய வளர்ச்சியை அதிகரிக்கும்.

2.சமூக பழக்க வழக்கம், விளையாட்டு:

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பது அவர்களுடைய மன இறுக்கத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் ஆட்டிசம் குழந்தைகளுக்கு சக குழந்தைகளுடன் பழகவும், பேசவும், விளையாடவும் வாய்ப்பளிப்பது அவர்கள் நிலைமையில் முன்னேற்றத்தை கொண்டு வர உதவும். முடிந்த வரை உங்கள் குழந்தைக்கான நல்ல நண்பர்களை உருவாக்குங்கள்.

இதையும் படிங்க: cholesterol: கொலஸ்ட்ரால் பற்றிய இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

அதேபோல் சமூகத்தை அறிந்து கொள்ளும் வகையில், பூங்காவிற்கு அழைத்துச் செல்வது, ஓவியம் வரைவது, தீம் பார்க் போன்ற பொழுதுபோக்குத்தளங்கள் அல்லது உங்களது குழந்தைகளுக்கு பிடித்தமான ஆக்டிவிட்டிகளை செய்ய வைக்கலாம். அதேசமயம் அதிக இரைச்சல் இல்லாத அமைதியான இடங்களை தேர்வு செய்வது மிக முக்கியமானது.

3.பொழுது போக்கு நடவடிக்கைகள்:

ஏ.எஸ்.டி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, சாதாரண குழந்தையிலிருந்து வேறுபட்டது அல்ல. எனவே அவர்கலையும் பலகை விளையாட்டுகள், நடனம், கலை மற்றும் கைவினை போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுத்துங்கள்.

4.அமைதிப்படுத்தும் உத்திகள்:

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் கிடையாது. எனவே அத்தகைய சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டுமென பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: Winter Health Tips: குளிர்காலத்தில் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

பொது இடத்திலோ அல்லது வீட்டிலோ உங்கள் குழந்தை கட்டுப்பாட்டை இழந்து கத்துவதற்கு முன்பாக, அது செய்யக்கூடிய அறிகுறிகள் என்ன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். ஆட்டிசம் குழந்தை அமைதி இழக்கும் போது வாக்கிங் அழைத்துச் செல்வது, விரும்பும் பொருளை சாப்பிட தருவது, விருப்பமான விஷயத்தை செய்ய அனுமதிப்பது என ஏதாவது ஒன்றை பழக்கப்படுத்த வேண்டும்.

5. உடற்பயிற்சி முக்கியம்:

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், சாதாரண குழந்தைகளைப் போலவே உடல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு பிடித்தமான உடற்பயிற்சியை கண்டுபிடித்து, அதனை தினந்தோறும் செய்ய ஊக்குவிக்கலாம். மீண்டும், மீண்டும் உடற்பயிற்சி செய்வது அவர்களது நடத்தை மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

6.வீட்டை பாதுகாப்பான இடமாக மாற்றுங்கள்:

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்களை சுற்றியுள்ள ஆபத்துக்கள் பற்றி தெரியாது. இதனால் தடுக்கி விழுவது, இடித்துக்கொள்வது, தீயில் சுட்டுக்கொள்வது என பல்வேறு வகையான சுய காயங்களுக்கு ஆளாவார்கள்.

இதனை தடுக்க வீட்டில் கூர்மையான கருவிகள், சுத்திகரிப்பு ரசாயனங்கள், மின்சாதனங்கள் போன்றவற்றை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறுவதை தடுக்க எப்போதும் கதவு அல்லது கேட்டை பூட்டி வைப்பது பாதுகாப்பானது.

7.உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்:

கடைசியாக, பெற்றோராக, நீங்கள் உங்கள் உடலையும் மனதையும் சீராக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் குழந்தையால் ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் சவால்களை நீங்கள் சமாளிக்க முடியும். எனவே தினமும் உங்களுக்கான ஓய்வு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

அத்தருணங்களில் சுய பராமரிப்பு, உடற்பயிற்சி, புத்தகம் வாசிப்பது, தியானம் அல்லது பிடித்த வேலைகளை செய்வது என கிடைக்கும் நேரத்தை உங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

Read Next

World Prematurity Day: குறைமாத குழந்தைக்கு கண்பார்வை தெரிய இந்த டெஸ்ட் ரொம்ப முக்கியம்

Disclaimer

குறிச்சொற்கள்