இந்தியாவில் குழந்தைகள் பிறந்தது முதல் மாத, மாதம் படிபடியாக வளருவது வரை ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. இதில் காது குத்துவது பல்லாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பெற்றோர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
6 மாதங்களுக்கு முன்:
முக்கிய கட்டுரைகள்
சில குழந்தைகளுக்கு பிறந்து 6 மாதங்களுக்குள் காது குத்தப்படும். அது நல்லதல்ல. அந்த நேரத்தில் குழந்தைக்கு போதுமான நோயெதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால், தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் அனைத்தையும் கொடுத்த பிறகு, 10 மாதங்கள் வரை காது குத்துவதை தள்ளிப்போடலாம்.

கையுறைகள் கட்டாயம்:
குழந்தைக்கு காது குத்தும் நபர் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும். அதேபோல் காது குத்த பயன்படுத்தப்படும் ஊசி உள்ளிட்ட அனைத்து கருவிகளும் முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்துடன் முதலுதவி பெட்டியையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
மருத்துவருடன் ஆலோசனை:
குழந்தையின் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களைத் தவிர வேறு யாரும் நன்றாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே காது குத்துவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள்.
சரியான இடம்:
காது குத்துவதற்கு முன்பாக சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் தவறான இடத்தில் குத்தப்பட்டால், காதுகள் இறுகிவிடும். குழந்தைக்கு நீளமான முடி இருந்தால், முதலில் அதனை சீராக கட்ட வேண்டும். இதனால் காது குத்துவோரின் கவனம் சிதறாது. அதற்காக ஹேர் ஸ்ப்ரே, ஜெல், வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
கவனமாக இருங்கள்:
காது குத்திய பின் ஏற்படும் வலி மற்றும் காயம் முற்றிலும் குறையும் வரை குழந்தைகளை அதிகம் விளையாட விடாதீர்கள். வெளியில் செல்வதையும் குறைக்க வேண்டும். குழந்தைகளைத் தூக்கும் போதும், அவர்களுடன் விளையாடும் போதும் கவனத்துடன் கையாள வேண்டும்.
Image Source: Freepik